3 மாசமா இந்த ஒரு விஷயத்தை கைவிட்டேன்.. அதான் டி20 உலக கோப்பைக்கு செலக்ட் ஆனேன் – சஞ்சு சாம்சன் தகவல்

0
698
Sanju

இந்த ஆண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில்தான் சஞ்சு சாம்சன் முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் கடந்தார். மேலும் இது அவருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்பொழுது இதற்காக எப்படி கடுமையாக உழைத்தார் என்பது குறித்து சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.

17ஆவது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தினார். ஆனால் அவர்களுக்கு கடைசி ஐந்து போட்டிகள் சரியான வழியில் செல்லவில்லை. ஆனாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி, இரண்டாவது தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் அவர் சிறப்பான முறையில் கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பங்களிப்பு செய்த காரணத்தினால், டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. இது அவருக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் முதல் முறை கிடைத்திருக்கும் வாய்ப்பாகும். பலமுறை அவர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “டி20 உலக கோப்பை இந்திய அணியில் தேர்வானது மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. நேர்மையாகச் சொன்னால் நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் செலக்ட் ஆவதற்கு அருகில் இல்லை. எனவே நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனவே ஐபிஎல் தொடரை பயன்படுத்த நினைத்தேன். என் மொபைல் போனை மூன்று மாதங்களாக சுவிட்ச் ஆப் செய்து விட்டேன்.

நான் என் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் மேலும் எனது அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ய வேண்டும், இது இந்திய அணியில் இடம் பெறுவதற்கு உதவி செய்யும். உலகின் தலைசிறந்த மற்றும் கோப்பையை வெல்ல தகுதியான டி20 அணியில் நான் விளையாட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸி அணிக்கு பீல்டிங் செய்த தேர்வுக்குழு தலைவர் பயிற்சியாளர்கள்.. டி20 உ.கோ பயிற்சி போட்டியில் சுவாரசியம்

என்னிடம் இதற்கான திறமை இருப்பதாக தெரியும். நான் என்னுடைய சொந்த திறமையை பயன்படுத்தி விளையாடினால், அது பயனுள்ள ஒன்றாக இருக்கும். என் நாட்டிற்காக உலகின் மிகப்பெரிய அரங்கில் விளையாட தயாராக இருக்கிறேன். மேலும் எனது நாட்டிற்காக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.