ஆஸி அணிக்கு பீல்டிங் செய்த தேர்வுக்குழு தலைவர் பயிற்சியாளர்கள்.. டி20 உ.கோ பயிற்சி போட்டியில் சுவாரசியம்

0
816
Australia

நேற்று டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா அணி நமீபியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் சுவாரசியமாக ஆஸ்திரேலியா அணிக்கு அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் குழு களத்தில் பீல்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர்களான பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் பிளே ஆப் சுற்றில் விளையாட வேண்டி இருந்தது. இதன் காரணமாக அவர்கள் நேற்று உடனடியாக பயிற்சி போட்டிக்கு திரும்ப முடியவில்லை.

- Advertisement -

மேலும் சில வீரர்கள் கிடைக்காத காரணத்தினால் ஆஸ்திரேலியா அணி நேற்று நமீபியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஒன்பது வீரர்களுடன் மட்டுமே விளையாடியது. குறிப்பாக நேற்று டிம் டேவிட் 4 ஓவர் பந்து வீசினார். மேலும் அணியின் கேப்டன் மிட்சல் மார்ஸ் காயம் காரணமாக வெளியேற இன்னும் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி, பீல்டிங் பயிற்சியாளர் போரோவிக் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் என எல்லா மூத்த அணி பொறுப்பாளர்களும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஸ் இதற்கு முன்பாகவே இந்த சூழ்நிலை பற்றி பேசி இருந்தார். மேலும் அவர் பயிற்சி போட்டியை விட வீரர்களுக்கான ஓய்வுதான் மிகவும் முக்கியமானது, எனவே தாங்கள் வீரர்களின் ஓய்வுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை பயிற்சி போட்டி.. 181 ரன்.. இலங்கை அணியை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்

குறிப்பிட்ட இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. நமீபியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்தது. திருப்பி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து ஓவரில் மூன்று விக்கெட் இழந்து 123 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். மேலும் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஹேசில்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி முதல் மூன்று ஓவர்கள் மெய்டன் செய்து, 5 ரன் மட்டுமே விட்டு தந்து, 3 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.