இந்திய கிரிக்கெட்

சூர்யா சொன்ன அந்த வார்த்தை.. என் கேரியரில் எந்த கேப்டனும் சொல்லலை – சஞ்சு சாம்சன் பேட்டி

கேப்டன் சூரியகுமார் யாதவ் தனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவையும் நம்பிக்கையும் கொடுத்ததாக, நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பங்களாதேஷ் மற்றும் தற்போது தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இரண்டு டி20 தொடர்களிலும் சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இந்த இரண்டு தொடர்களிலும் அவர் இரண்டு சதங்களும் அடித்திருக்கிறார். தற்போது திடீரென இந்திய டி20 கிரிக்கெட்டில் மிக முக்கியமான வீரராகவும் மாறி இருக்கிறார்.

சூரியகுமார் கம்பீர் செய்த மாற்றம்

பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிஷேக் ஷர்மாவை மட்டும் சேர்த்துக் கொண்டு ருதுராஜை கழட்டி விட்டார்கள். இத்தோடு சஞ்சு சாம்சனை துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து, அதை வெற்றிகரமான முடிவாகவும் மாற்றி விட்டார்கள். தற்பொழுது இந்திய டி20 அணியின் பலம் பெரிய அளவில் மாறி இருக்கிறது.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் முன்கூட்டியே சொன்னார்

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும்பொழுது ” நான் துலீப் டிராபியின் இரண்டாவது போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது சூரியகுமார் யாதவ் வேறொரு அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் என்னிடம் அடுத்து ஏழு டி20 போட்டிகள் நீங்கள் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடப் போகிறீர்கள், என்ன நடந்தாலும் நான் உங்களை முழுமையாக ஆதரிக்க போகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : 168 ரன்.. இந்திய ஏ அணி மீண்டும் தோல்வி.. துருவ் ஜுரல் இரட்டை போராட்டம் வீண்.. ஆஸி ஏ அணி அபார வெற்றி

“அவர் இந்த வாக்குறுதியை தந்த பிறகுதான் எனக்கு தெளிவு கிடைத்தது. என் கேரியரில் முதல்முறையாக தொடர்ந்து ஏழு போட்டிகள் விளையாடப் போகிறேன் என்று தெரிந்ததால் நான் வித்தியாசமான மனநிலையுடன் வெளியே வந்தேன். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டியும் இருந்தது. கேப்டனிடம் இருந்து நல்ல தெளிவும் நம்பிக்கையும் கிடைத்தது. இதன் மூலம் நீண்ட தூரம் பார்க்காமல் அணிக்காக எனது பங்களிப்பை செய்யும் தெளிவோடு வந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts