சிஎஸ்கே அணியின் முதுகெலும்பு நான் இல்லை இந்த வீரர்தான்.. வாய்ப்பு மட்டும் கொடுத்தா போதும் – ருதுராஜ் பேச்சு

0
19
Ruturaj

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி ஏழு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் 52 பந்தில் 87 ரன்கள், இளம் வீரர் கார்த்திக் சர்மா 31 பந்தில் 41 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுக்க சிஎஸ்கே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

தேவைப்பட்டது கிடைத்தது

மேலும் இந்த வெற்றி சிஎஸ்கே அணிக்கு ஐந்தாவது வெற்றியாக அமைந்திருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு மூன்று போட்டிகள் உள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும்போது “நாங்கள் எப்போதும் பாசிட்டிவாக இருந்தோம். கடந்த ஆண்டை விட இப்போது வெற்றிக்கு மிக அருகில் இருந்தோம். அணியின் அனைத்து பகுதிகளையும் மிகவும் சரியாக கவனித்து வந்திருக்கிறோம். மேலும் சஞ்சு அணியில் இணைந்தது சிறப்பானதாக மாறியது. எங்களுக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவைப்பட்டது. அது கிடைத்ததும் எல்லாம் மாறியது”

- Advertisement -

முதுகெலும்பு இவர்தான்

“தற்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன். மேலும் பவுலர்கள் போட்டியை வென்று கொடுப்பார்கள் என்று சொல்லுவார்கள். தற்போது எங்களிடம் அகேல், ஓவர் டைம் எத்தனை சிறப்பான பவுலர்கள் இருக்கிறார்கள். மேலும் காம்போஜ் மிகவும் புத்திசாலித்தனமான பவுலர். அவருக்கு இன்றைய நாள் சரியான அமையவில்லை. அவர் திரும்பி வருவார்”

இதையும் படிங்க : நேர்மையா சொன்னா.. 5 மாசமா இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணி தான் நல்லா விளையாடுறேன்.. சீக்கிரட்டை உடைத்த சாம்சன்

“கார்த்திக் சர்மாவுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த சில வாய்ப்புகளில் சரியாக செல்லவில்லை. தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். அவர் பெரிய ஷாட் மட்டுமே அடிக்கும் வீரர் கிடையாது. அவருக்கு சரியான இடங்களில் அடிக்கவும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் தெரியும். அவருக்கு நம்பிக்கை வந்திருப்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -