5 சிக்ஸர்கள் அடிக்க அப்ப இருந்தே முயற்சி செய்றேன்.. ஆனா ஒரு விஷயம் வெறுப்பா இருந்தது – சஞ்சு சாம்சன் பேட்டி

0
796
Samson

இன்று இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் 47 பந்தில் 111 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது வென்று போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் துவக்க ஆட்டக்காரராக வாய்ப்பு பெற்ற சந்து சாம்சன் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் இன்று சஞ்சு சாம்சன் தன்னை எப்படியாவது நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

- Advertisement -

நெருக்கடியில் சாதித்த சஞ்சு சாம்சன்

இன்று ஒரு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 4 ரன்கள் வெளியேறிய நிலையில், சஞ்சு சாம்சன் கேப்டன் சூரியகுமார் யாதவ உடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 22 பந்தில் அரை சதம் அடித்த அவர் 40 பந்தில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். 47 பந்தில் அவர் 111 ரன்கள் குவிக்க இந்திய அணி 297 ரன்கள் ஆறு விக்கெட் இழப்புக்கு குவித்து சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு தவ்ஹீத் ஹ்ரிடாய் மட்டுமே தாக்குப்பிடித்து 42 பகுதியில் 63 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

- Advertisement -

என்னால் அழுத்தத்தை சமாளிக்க முடியும்

சஞ்சு சாம்சன் சதம் அடித்தது பற்றி கூறும்பொழுது ” அணியின் ஓய்வறையில் வீரர்கள் எல்லோரும் மகிழ்ச்சியான மனநலையை வெளிப்படுத்தினார்கள். அது நான் நன்றாக இருப்பதற்கு உதவி செய்தது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரிந்தும் நான் ஏதும் செய்யாததால் வெறுப்பாக இருந்தது. என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நான் உணர்ந்தேன்”

“மேலும் சீனியர் வீரராக பல போட்டிகளை விளையாடி உள்ள எனக்கு அழுத்தத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். இந்திய அணிக்கு விளையாட வரும் பொழுது அழுத்தம் இருக்கவே செய்யும். கடந்த தொடரில் நான் இரண்டு முறை டக் அவுட் ஆனேன். அங்கிருந்து என்ன நடக்கும் என்று நினைத்துக் கொண்டே நான் அப்படியே கேரளா சென்றேன். ஆனால் தற்போது எங்கே இருக்கிறேன்”

இதையும் படிங்க : 133 ரன்.. 7வது சீரிஸ் வெற்றி.. ஹீரோவான சாம்சன்.. பங்களாதேஷ் ஒயிட் வாஸ்.. இந்திய அணி தொடரை கைப்பற்றியது

“எனக்கு அணி நிர்வாகம் நான் சரியாக விளையாடாத பொழுதும் ஆதரவாக இருந்தது. இன்று ஒரு ஓவரில் நான் ஐந்து சிக்ஸர்கள் அடித்தேன். இப்படி ஏதாவது செய்வதற்கும் அடிப்பதற்கும் நான் அதை துரத்திக் கொண்டேதான் இருக்கிறேன். இறுதியாக இன்று அது நடந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -