இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றியது.
இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய் உள்ளே வர, அர்ஸ்தீப் சிங் வெளியே சென்றார்.
சஞ்சு சாம்சனும் இந்திய அணியும் சாதனை
இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 4 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சஞ்சு samsung மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை மைதானம் எங்கும் சிதறடித்தார்கள். இந்த ஜோடி வெறும் 70 பந்தில் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
சஞ்சு சாம்சன் 47 பந்தில் 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் உடன் 111 ரன்கள், சூரியகுமார் யாதவ் 35 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள், ரியான் பராக் 13 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உடன் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 4 சிக்ஸர் உடன் 47 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் அடித்த நாடாக இந்திய அணி சாதனை படைத்தது. சூரியகுமார் டி20 கிரிக்கெட் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை செய்தார்.
பங்களாதேஷ் அணி ஒயிட் வாஷ்
இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி முதல் பந்திலேயே துவக்க ஆட்டக்காரர் விக்கெட்டை இழந்தது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 25 பந்தில் 42 ரன்கள், தவ்ஹீத் ஹரிடாய் 42 பந்தில் 63* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : எமர்ஜிங் ஆசிய கோப்பை.. இந்திய அணி அறிவிப்பு.. திலக் வர்மா கேப்டன்.. பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னாய் மூன்று விக்கெட் கைப்பற்றினார். மேலும் இந்திய அணி தொடர்ச்சியாக ஏழாவது டி20 தொடரை வென்று இருக்கிறது. மேலும் இந்த வருடத்தில் இந்திய அணி ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது.






