ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் அன் கேப்டு வீரராக தோனி விளையாட முடியுமா?.. வாய்ப்பு உண்டா – அஸ்வின் கருத்து

0
62
Dhoni

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்கள் அணியில் தோனியை தொடர செய்வதற்காக, அவரை அன்கேப்டு லிஸ்டில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக செய்திகள் வந்தது. தற்பொழுது தோனியை இந்த பிரிவில் வைக்க முடியுமா? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

இந்திய அணிக்காக அறிமுகமாகாத வீரர்கள் அன்கேப்டு வீரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களை ஒரு அணி நிர்வாகம் தக்க வைத்தால் நான்கு கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தால் போதும். அவர்களுடைய மொத்த ஏலத் தொகையில் நான்கு கோடி ரூபாய் மட்டுமே கழியும். இதன் மூலம் ஏலத்தில் பெரிய வீரர்களுக்கு சேர்த்து செலவு செய்ய முடியும்.

- Advertisement -

இப்பொழுது மகேந்திர சிங் தோனியை தங்கள் அணியில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தக்க வைத்து விட சிஎஸ்கே பெரிய முயற்சி செய்கிறது. இதற்காக கடந்த வாரம் நடைபெற்ற ஐபிஎல் கூட்டத்தில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தினால் அவரை அன்கேப்டு லிஸ்டில் வைக்க வேண்டும் எனவும், அவரை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறது..

அதே சமயத்தில் மற்ற அணி நிர்வாகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தோனிக்கு மிகப்பெரிய பிராண்ட் வேல்யூ இருக்கிறது. அவர் ஒரு அணியில் ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருந்தாலே அந்த அணிக்கான சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. எனவே அப்படிப்பட்ட ஒரு வீரரை அன்கேப்டு லிஸ்டில் வைப்பதற்கு அணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தோனி அன்கேப்டு வீரராக விளையாட முடியுமா? என்றால் இது ஒரு பெரிய கேள்விக்குறிதான் என்று நான் சொல்லுவேன். சிஎஸ்கே அணி நிர்வாகம் வைக்கும் பாயிண்ட் சரியானது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடவில்லை என்பது சரிதான்.

இதையும் படிங்க : ரோகித் கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா எதிர் கருத்து.. சின்ன பசங்க பயனடையறாங்க.. எல்லாம் தொடரட்டும்

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் முன்பே ஓய்வு பெற்று விட்டார். எனவே அவர் அன்கேப்டு வீரர். கேப்டு வீரர் கிடையாது. இப்படியான சிஎஸ்கே அணி வைக்கும் பாயிண்ட் சரியாகத்தான் தெரிகிறது. ஆனால் தோனி போன்ற மிகப்பெரிய வீரர் அன்கேப்டு வீரராக விளையாட முடியுமா? என்பது மிகப்பெரிய விவாதமாக இருக்கும். இதுகுறித்து நிறைய பேர் பேசுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -