இந்த மாதம் துவங்க இருக்கும் 18ஆவது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் 13 வயது வீரர் களம் இறங்குவதற்கு தயாராக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இளம் வயதில் இருந்து மகேந்திர சிங் தோனி உடன் நேரத்தை பகிர்ந்து கொள்ளவும், அவரிடம் பேசி அவர் விஷயங்களை எப்படி செய்கிறார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதாகவும், தற்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்திருப்பது தனக்கு கனவு போல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
13 வயது பையன் தயார்
இது குறித்து சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “வைபவ் சூர்யவன்சி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் பயிற்சியின்போது மைதானத்திற்கு வெளியே சில சிக்ஸர்கள் அடித்தார். அவருடைய பவர் ஹிட்டிங் பற்றி மக்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவரிடம் நாம் வேறு என்ன கேட்க வேண்டும்? அவருடைய பலம் என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும், அவருக்கு ஒரு மூத்த சகோதரனைப் போல ஆதரவு கொடுப்பது இவற்றைத்தான் செய்ய முடியும்”
“அவர் தயாராக இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் அவருக்கு ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி அவரை நிதானமாக வைத்திருப்பது முக்கியம். இதைச் செய்வதில் ராஜஸ்தான் ராயல்ஸ் எப்பவும் சிறப்பாக இருந்திருக்கிறது. அவர் இரண்டு வருடங்களில் இந்தியாவுக்கு விளையாடினாலும் விளையாடலாம். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் திறன் பெற்றவராக இருக்கிறார். இங்கு அவரால் ஏதாவது செய்ய முடியும். பிறகு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அப்போது பார்க்கலாம்”
தோனியைச் சுற்றி இருப்பது
“ஒவ்வொரு இளம் இந்திய கிரிக்கெட் போலவே நானும் மகேந்திர சிங் தோனி உடன் இருப்பதற்கு விரும்பினேன். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறை சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய பொழுதும் அவருடன் அமர்ந்து பேச விரும்பினேன். அவர் எப்படி விஷயங்களை செய்கிறார் என அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது”
இதையும் படிங்க : இந்தியா வென்றது.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூ-வில் இருக்கு.. அதுக்கு காரணம் இந்த முட்டாள்தனம்தான் – ஷாகித் அப்ரிடி கோபம்
“இதற்குப் பிறகு நான் அவரை அடிக்கடி சந்தித்தேன். எங்களுடைய உறவு வளர ஆரம்பித்தது. நேற்று நான் அவரை மீண்டும் சந்தித்த பொழுது அது எனக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வாக இருந்தது. என்னுடைய ஐடியலாக இருந்தவருடன் இப்பொழுது படபிடிப்பு மற்றும் தனிப்பட்ட முறையில் நேரம் செலவிடுவது என்பது உண்மையில் நான் செய்த பாக்கியம். நான் இப்பொழுது என் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






