நான் ஒரு கொடிய காம்போவை ரெடி பண்ணி இருக்கேன்.. இதுக்காகவே கேக் வெட்ட போறேன் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
62
Sanju

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து மீண்டும் கேப்டனாக திரும்பி வந்திருக்கும் சஞ்சு சாம்சன் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கேப்டன் சஞ்சு சாம்சன் இம்பேக்ட் பிளேயராக இருந்தார். இதற்கு அடுத்து நேற்று நான்காவது போட்டிக்கு மீண்டும் கேப்டனாக திரும்பி வந்தவுடன் 50 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

முதல் ஓவரிலேயே திருப்பம்

நேற்று ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் பவர் பிளேவில் ஆரம்பத்தில் பொறுமையை காட்டினார்கள். பவர் பிளேவின் கடைசி மூன்று ஓவர்களில் அதிரடிக்கு மாறினார்கள். மீண்டும் தேவைக்கு தகுந்த அளவிற்கு மட்டும் அதிரடியாக ஆடி விக்கெட் இழக்காமல் இருப்பதை உறுதி செய்தார்கள். இதன் காரணமாக கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி 203 ரன்கள் குவித்தார்கள்.

மேலும் பந்து வீச்சுக்கு வந்த பொழுது முதல் ஓவரிலேயே ஆர்ச்சர் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். ஆரம்ப சர்வில் இருந்து பஞ்சாப் அணியால் மீள முடியவில்லை. இதைத்தொடர்ந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இது டெட்லி காம்போ

“ஆர்ச்சர் மற்றும் சந்திப் சர்மா இருவரும் சேர்ந்த கூட்டணி மிகவும் ஒரு டெட்லியான காம்போ. ஒருவர் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார். இன்னொருவர் 115 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார். சந்தீப் சர்மா 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசினாரா? சரி சரி அப்படி என்றால் அதற்காக நாங்கள் கேக் வெட்ட வேண்டும். அழுத்தம் நிறைந்த ஓவர்களுக்கு நான் இவர்களை நம்பலாம். ஆர்ச்சர் வேகமாக பந்துவீசும் பொழுது அனைவருக்கும் பிடிக்கும். கடந்த நான்கு வருடங்களில் இந்தியாவில் வேகமாக பந்து வீசக்கூடியவர்களில் அவரும் ஒருவர்”

இதையும் படிங்க : நானும் ரோகித்தும் 17 வருஷமா ஒண்ணா ஆடறம்.. எங்க பிணைப்பு இப்படியானதுதான் – விராட் கோலி பேச்சு

“நாங்கள் டைம் அவுட்டில் ஒரு சிறிய ஆலோசனையை நடத்தினோம். பஞ்சாப் சிறந்த அணி அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, போட்டியை வெல்லும் கடைசிவரையில் அழுத்தம் இருக்கும் என்று நான் அணிக்கு கூறினேன். நாங்கள் எங்களுடைய பேட்டிங் ஆர்டர் மற்றும் சிறந்த காம்பினேஷன் எதுவென்பதை முடிவு செய்ய நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டோம். பிறகு செய்ய வேண்டியதை செய்ததால் வெற்றி தானாக வந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -