இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டம் தொடர்கிறது.
இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா முதலில் பந்து விஜய் தேர்வு செய்தார். இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் டசன் சனக நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் மிதவேக பந்துவீச்சு ஆள் ரவுண்டர் விக்கிரமசிங்கே சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் மீண்டும் வந்தார். மேலும் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரிஷப் பண்ட் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. சிவம் துபே வாஷிங்டன் சுந்தர் மற்றும் கலீல் அகமது ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள்.
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக காணப்பட்டது. ஜெய்ஸ்வால் 10, சஞ்சு சாம்சன் 0, ரிங்கு சிங் 1, சூரியகுமார் யாதவ் 8, சிவம் துபே 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து கில் 37 பந்துக்கு 39 ரன், ரியான் பராக் 17 26 ரன்கள் எடுத்து அணியை ஓரளவுக்கு காப்பாற்றினார்கள்.
இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தரப்பில் மதிஷா தீக்ஷனா 3 மற்றும் ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார். கடைசி ஐந்து போட்டிகளில் அவர் மூன்று முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். மேலும் ஒரு வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் யூசுப் பதான் (2009), ரோகித் சர்மா (2018), ரோகித் சர்மா (2022), விராட் கோலி (2024) மூன்று முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். தற்போது சஞ்சு சாம்சனும் இந்த வருடத்தில் மூன்று முறை சர்வதேச கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகி இருக்கிறார். மேலும் ஒருமுறை டக் அவுட் அவர் ஆனால் இந்திய கிரிக்கெட்டின் மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இதையும் படிங்க : அஸ்வின் பத்தி சொன்னத வார்னர் கேட்கல.. அப்புறம் அதுக்காக மன்னிப்பு கேட்டார் – தமிழக வீரர் ஸ்ரீராம் பேட்டி
இத்தோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 25 இன்னிங்ஸ்கல் விளையாடி குறைந்த ஆவரேஜ் வைத்திருப்பவராக சஞ்சு சாம்சன் இருக்கிறார்.
19.30 – சஞ்சு சாம்சன்*
20.13-அக்சர் படேல்
21.45 – ரவீந்திர ஜடேஜா
23.25- ரிஷப் பந்த்
25.67 – ஹர்திக் பாண்டியா