இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கே இந்த பையன ஏலத்துல கட்டாயம் வாங்கும்.. அவனுடைய தேவை டீமுக்கு இருக்கு – அஸ்வின் கணிப்பு

​ அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட பேட்டரை வாங்குவதற்கு சிஎஸ்கே அதுவும் முக்கியத்துவம் கொடுக்கும் என ரவிச்சந்திரன் அவசியம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணியில் பேட்டிங் யூனிட்டில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் சிஎஸ்கே அணி ஏலத்தை அணுகும் என்று அவர் கூறியிருக்கிறார்.
​
​இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “நிதீஷ் ராணா மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் விடுவிக்கப்பட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை போரலின் ஆஃப்-பீல்டு சர்ச்சைகள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம், ஏனென்றால் தாதா அவரை உண்மையிலேயே உயர்வாக மதிப்பிட்டார் என்பது எனக்குத் தெரியும்” என்று ஆரம்பித்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர் “ஒருவேளை அது மட்டுமே காரணமாக இருக்கலாம். மற்ற அணிகள் அதை எப்படிப் பார்க்கப் போகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும். ராணாவை ஏலத்தில் எடுக்கப் பல அணிகள் போட்டி போடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு லெஃப்ட்-ஹேண்டர்ஸ் தேவைப்படுவதால், ஒருவேளை சிஎஸ்கே அவரைத் தேடிச் செல்லலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by