அஸ்வின் பத்தி சொன்னத வார்னர் கேட்கல.. அப்புறம் அதுக்காக மன்னிப்பு கேட்டார் – தமிழக வீரர் ஸ்ரீராம் பேட்டி

0
181
Ashwin

ஆஸ்திரேலிய அணியில் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த காலத்தில் அஸ்வின் பந்துவீச்சு குறித்து எச்சரித்ததற்கு டேவிட் வார்னர் கோபப்பட்டார் என்றும், பிறகு அதைப் புரிந்து கொண்டு தன்னிடம் பேசினார் என்றும் தமிழக மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.

ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளர் பொறுப்பில் உள்நாட்டில் தமிழ்நாடு, கோவா, அசாம், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநில அணிகளுக்கு பணியாற்றி இருக்கிறார். கடைசியாக அவர் பங்களாதேஷ் அணிக்கும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார்.

- Advertisement -

மேலும் அவர் இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து, ஆஸ்திரேலியா தேசிய அணிக்கு லெக்மனன் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பில் இருந்தார். இந்த பயிற்சி நாட்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை எப்படி விளையாட வேண்டும் என்று டேவிட் வார்னரிடம் கூறியதற்கு அவர் கோபப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேசும் பொழுது ” டேவிட் வார்னருடன் எனது முதல் உரையாடலின் போது ஆசியாவில் நீங்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது, கிரீஸில் இருந்து வெளியேறி விளையாட வேண்டும், மேலும் ஸ்வீப் ஷாட் அடிக்க வேண்டும், இல்லையென்றால் பத்துக்கு பத்து முறை ரவிச்சந்திரன் உங்களை அவுட் செய்து உட்கார வைத்து விடுவார் என்று கூறினேன்.

- Advertisement -

டீம் மீட்டிங்கில் டேவிட் வார்னர் என் பேச்சு குறித்து கோபமடைந்தார். அப்போது டேவிட் வார்னர் ‘நான் ஐபிஎல் தொடரில் வெற்றியடைந்த ஒரு பேட்ஸ்மேன் இவர் என்னை விளையாட முடியாது என்று கூறுகிறார்’ என்று கோபப்பட்டார். அதற்கு தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் பொதுவில் இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று அணியில் கூறி விட்டார்கள். ஆனாலும் கூட டேவிட் வார்னர் மீண்டும் ‘இல்லை நான் ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேன் என்னால் என்னை மாற்றிக் கொள்ள முடியாது’ என்று கூறிவிட்டார்.

ஆனால் 8 மாதங்கள் கழித்து இது குறித்து மீண்டும் பேச அவர் என்னிடம் வந்தார். இதுதான் சிறந்த மற்றும் பெரிய மனிதனின் குணம். அப்போது என்னிடம் பேசிய அவர் ‘நீங்கள் அப்போது சொன்னதின் மதிப்பு எனக்கு இப்போதுதான் புரிகிறது. நான் பொதுவாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கிரிசுக்குள் நின்று ஸ்லைடாக வீசப்படும் பந்தில் கட் ஷாட் விளையாடுவேன்.

இதையும் படிங்க : இந்தியா ODI: இலங்கை அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. 3 மூத்த வீரர்கள் நீக்கம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி விளையாடும் பொழுது என்னுடைய காலுக்கும் பேட்டுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருக்கிறது. வெளியில் செல்லும் பந்துக்கு கட் ஷாட் விளையாடி விடுகிறேன். ஆனால் அதுவே உள்ளே வரும் பந்தாக இருந்தால் பிரச்சனையாகி விடுகிறது. எனவே இதற்கு விரைவில் தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும்’ என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -