தற்பொழுது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் செமி பைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதில் வினோத பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
கடந்த வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சங் 50 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் குறித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனலில் அவருடைய பேட்டிங் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் எடுத்தார். இருந்த போதிலும் அவர் இதற்கு எந்தவித கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக கடந்து சென்றார். மேலும் கடைசிவரையில் இருந்து போட்டியை முடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் வெளிப்பட்டது.
அதேசமயத்தில் போட்டியை முடித்த பிறகு அவர் ஹெல்மெட்டை கழட்டி மெதுவாக எறிந்துவிட்டு கிறிஸ்தவ முறையில் கடவுளை வணங்கி தனது கொண்டாட்டத்தை செய்தார். அப்பொழுதும் கூட அது பெரிய ஆக்ரோஷமான கொண்டாட்டமாக எதுவும் இல்லை. ஆனால் தற்போது அதுவே பிரச்சனையாகியுள்ளது.
ஐசிசி வீரர்கள் தங்களுடைய ஹெல்மெட்டை கழட்டி எறிந்து கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. தற்போது இந்த விதியின் கீழ் சஞ்சு சாம்சன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பிரச்சனையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது ஐசிசி தண்டனைக்கு கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபிஷேக் ஷர்மா கிட்ட செமி பைனலுக்கு பிளான் இருக்கும்.. ஆனா இந்திய அணியின் பிரச்சனையே வேற – ரிக்கி பாண்டிங் கருத்து
தற்போது இதற்கு ஐசிசி ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இல்லையென்றால் அபராதம் மிதிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. இரண்டில் ஒன்று சஞ்சு சாம்சனுக்கு தண்டனையாக வழங்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனால் அவர் செமி பைனலில் விளையாடும் வாய்ப்பு ஆபத்தில் இருக்கிறது.