அபிஷேக் ஷர்மா கிட்ட செமி பைனலுக்கு பிளான் இருக்கும்.. ஆனா இந்திய அணியின் பிரச்சனையே வேற – ரிக்கி பாண்டிங் கருத்து

0
10
Abhishek

இந்திய அணி நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் டி20 உலகக்கோப்பை செமி பைனலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு அபிஷேக் சர்மாவிடம் திட்டங்கள் இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஒரு அரைசதம் அடித்திருக்கிறார். மேலும் தனது முதல் மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனதுடன் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

பயிற்சி வேண்டாம்

இந்த நிலையில் அடுத்த போட்டிக்கு அபிஷேக் ஷர்மா என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்றும், ஒருவேளை அவரை நீக்கிவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “சில நேரங்களில் நீங்கள் இதுபோன்ற ஒரு சரிவை சந்திக்கும் பொழுது வலைப்பயிற்சியில் மணிக்கணக்கான நேரம் பேட்டிங் பயிற்சி செய்வது சரியானதாக இருக்காது. சில நேரங்களில் ஃபார்ம் இல்லாமல் இருக்கும் வீரர்களை புத்துணர்ச்சி பெறுவதற்காக வெளியில் விட்டு விடுவது நல்லது. திறமைகள் எங்கும் செல்லாது. பயிற்சி செய்யாவிட்டால் திறமையை இழக்க மாட்டீர்கள்”

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

“நீங்கள் ரன் எடுக்காமல் இருக்கும் இப்படியான காலகட்டத்தில் பயிற்சிக்கு வரும்பொழுது பீல்டிங் மற்றும் கொஞ்சம் பந்துவீச்சு பயிற்சி செய்துவிட்டு பேட்டிங் பயிற்சியை தவிர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இதை நாம் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க : ரிங்கு நீ தனியாக இல்லை.. மொத்த அணிக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.. இதை போய் செய்யுங்க – கம்பீர் பேச்சு

“அபிஷேக் சர்மாவின் நாளில் அவர் முழுமையான மேட்ச் வின்னர் என்பதை நாம் அறிவோம். இதுதான் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது. இதனால்தான் ஒருவரை நீக்க முடிவதில்லை. மேலும் நீங்கள் இவரை நீக்கிவிட்டு ரிங்கு சிங்கை கொண்டு வந்தால் அவரும் ஒரு மேட்ச் வின்னர்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -