ஐபிஎல்

32 பந்துகளில் 60 ரன்கள்… ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய ரெக்கார்ட் படைத்த சஞ்சு சாம்சன்… ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறையாம்!

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய ரெக்கார்டை படைத்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் சஞ்சு சாம்சன், அறிமுகமான முதல் சீசனில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடுவில் இரண்டு சீசன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடை செய்யப்பட்டதால் அப்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடினார்.

அதன் பிறகு 2018ஆம் ஆண்டு மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், கடந்த சில வருடங்களாக அணியின் கேப்டன் பொறுப்பேற்றும் விளையாடுகிறார். கடந்த 6 சீசன்களாக பேட்டிங்கில் 300 ரன்களுக்கு குறையாமல் அடித்து வருகிறார்.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பரபரப்பாக நடந்த போட்டியில் 186 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் 53 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

அடுத்த பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட 133 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தபோது சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 60 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டத்தை மொத்தமாக ராஜஸ்தான் அணியின் பக்கம் திருப்பிவிட்டு ஆட்டம் இழந்தார்.

பின்னர் சிம்ரன் ஹெட்மயர், கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் சஞ்சய் சாம்சன் 54 ரன்கள் அடித்தபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3000 ரன்களை அடித்திருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் ராஜஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை 115 போட்டிகளில் விளையாடி 3006 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடங்கும். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 119 ரன்கள் அடித்தார் அதுவே தற்போது வரை அதிகபட்சமாக இருந்து வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்

  1. சஞ்சு சாம்சன் – 115 போட்டிகள் – 3006 ரன்கள்
  2. அஜிங்க்யா ரகானே – 100 போட்டிகளில் 2810 ரன்கள் ஜோஸ் பட்லர் 63 போட்டிகளில் – 2508 ரன்கள்
  3. வாட்சன் 78 போட்டிகள் – 2372 ரன்கள்
- Advertisement -
Published by