இந்திய கிரிக்கெட்

பும்ரா இனி முன்னணி வீரர் அல்ல.. இந்திய கிரிக்கெட் அவருக்காக இனி இதை செய்யக்கூடாது – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஐந்தாவது போட்டியில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இவருக்கு ஏற்கனவே காயம் பிரச்சனை இருந்து வரும் நிலையில் அதற்குப் பிறகு மீண்டும் உடல் நலம் முன்னேறி ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதனால் நீண்ட தொடரான இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டியில் பும்ரா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது.

அதேபோல இரண்டாவது போட்டியில் விளையாடாத அவர் ஐந்தாவது போட்டியில் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் சஞ்சய் மஞ்சுரேக்கர் பும்ராவுக்கு தகுந்த மாதிரி இந்திய கிரிக்கெட் தன்னை மாற்றிக்கொள்ள கூடாது எனவும், சிறந்த உடல் தகுதி கொண்ட வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தற்போது அவசியம் என சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் பும்ராவின் பெரிய ரசிகன். அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய விரும்பினால் அவருக்கு நீண்ட ஆயுள் மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய திறன் அவசியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த விளையாட்டு வீரரின் சோதனை 100% உடல் தகுதி இல்லாத போதும் திரும்பி வந்து சிறப்பாக செயல்படுவது தான். இந்திய கிரிக்கெட் பும்ராவுக்கு ஏற்ப மாறக்கூடாது, பும்ராவும் அப்படித்தான் செய்ய வேண்டும். அதாவது அவர் விரும்பினால் அப்படி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:ஸ்டோக்ஸ்க்கு எதிர்ப்பாக பிசிசிஐ கொண்டு வரும் புதிய விதி.. அணிகளின் பலம் அதிகரிப்பு.. ரசிகர்கள் வரவேற்பு

விளையாட்டு மற்றும் வாழ்க்கையின் நித்திய உண்மையை நமக்கு இது காட்டுகிறது. பும்ராவை இந்தியா இனி இப்படித்தான் கையாள வேண்டும். அவர் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளுக்கு மேல் அல்லது சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் அவரை முன்னணி வீரராக வைத்திருக்கக் கூடாது. மிகவும் திறமையான வீரரை விட, பொருத்தமான சிறப்பாக விளையாட ஆர்வம் உள்ள வீரர்களை எந்த நாளிலும் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by