கோலிக்கு பிறகு பெங்களூரு அணியை வழிநடத்தப் போவது இந்த 3 வீரர்களின் ஒருவராகத்தான் இருக்கும் – மஞ்ச்ரேக்கர் கூறிய வீரர்கள்

0
1244
Sanjay Manjrekar and Virat Kohli

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மூன்று பார்மட்டுகளிலும் இந்திய அணியை இவர் வழிநடத்தி வருகிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 போட்டிகளில் இனி கேப்டனாக தொடர்பு கொள்வது இல்லை என்று கோலி கூறினார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்கு முன்பு அடுத்த தொடரில் இருந்து பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோலி. ஐபிஎல் தொடரில் கேப்டனாக பெங்களூரு அணிக்கு கடைசி தொடரில் விளையாடி வரும் விராட் கோலி இந்த தொடரின் சிறப்பாக ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேப்டன் பொறுப்பை விராட் கோலி துறந்தவுடன் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று தெரிந்து கொள்ள இப்போதே பலருக்கு ஆர்வம் உள்ளது. பலர் அடுத்த பெங்களூரு அணியின் கேப்டன் டிவிலியர்ஸாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது பற்றி கூறும்போது ஏற்கனவே டிவில்லியர்ஸ் தனது கேரியரின் முடிவில் இருப்பதால் அவர் கேப்டன் ஆகும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது பெங்களூரு அணிக்கு அடுத்த கேப்டனாக தற்போதைய மும்பை அணியின் வீரர் பொல்லார்டு செயல்படலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு மும்பை வீரரான சூரியகுமார் யாதவும் இந்த இடத்திற்கு வரலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரும் பெங்களூரு அணியை வழிநடத்த சரியானவர் என்று கூறியுள்ளார் மஞ்ரேக்கர்.

இதே கேள்வியை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிடம் கேட்டபொழுது அவரும் டிவிலியர்ஸ் என்னதான் சிறந்த வீரராக இருந்தாலும் தற்போது அவர் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் பெங்களூரு அணியை வரும் தொடர்களில் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பஞ்சாப் அணியின் தற்போதைய கேப்டன் கே எல் ராகுல் மீண்டும் பெங்களூரு அணிக்கு விளையாடி அந்த அணியை வழிநடத்தவும் செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியில் அவரது தலைமைப் பண்பு சரியாக வெளிப்படாததால் பெங்களூரு அணிக்கு அவர் அடி தன்னை நிரூபிக்கலாம் என்று டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.