இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், சுப்மன் கில்லுக்கு அவர் எதிர்பார்த்த வகையில் கேப்டன்ஷி தொடங்கவில்லை.இது குறித்து பேசிய முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்சுரேக்கர், “பெரும்பாலான நேரத்தில் கில் மிகவும் தற்காப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டதாக தெரிகிறது.”
“ஆனால், அவர் பவுண்டரிகளை தடுத்து இங்கிலாந்தை கட்டுப்படுத்த முயன்றார், இதனால் விக்கெட்டுகள் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
விராட் கோலியை கில்லோடு ஒப்பிடுவது பிடிக்கவில்லை, ஏனெனில் சுப்மன் கில் இளம் கேப்டன். ஆனால் கோலியாக இருந்திருந்தால், இப்படி தற்காப்பு மனப்பான்மையுடன் களத்தில் செய்திருக்க மாட்டார்.”
“விராட் கோலியாக இருந்திருந்தால் எங்களிடம் போதுமான ரன்கள் உள்ளன, டீ நேரத்திற்கு முன்பே உங்களை ஆட்டமிழக்கச் செய்வேன்’ என்று கூறியிருப்பார். ஆக்ரோஷமான கள அமைப்புடன் விக்கெட்டுகள் கிடைத்திருக்குமா என்பது உறுதியில்லை, ஆனால் அவர் அதற்கு முயற்சித்திருப்பார்.கில்லிடம் இங்கிலாந்து அணியைப் போல வேகப்பந்து வீச்சு வாய்ப்புகள் இல்லை.”
“பும்ரா இல்லை என்றாலும் இங்கிலாந்து அணிக்கு அதிக ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். ஜடேஜா பந்துவீச்சுக்கு கூட, இந்திய அணி ரிவர்ஸ் ஸ்வீப்பை தடுக்க முன்கூட்டியே எதிர்பார்க்காமல் வழக்கமான ஃபில்டிங் செட்டப் உடன் தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
முதலில், சில ஓவர்களுக்கு மட்டுமே ஆக்ரோஷமான மனநிலையுடன் தொடங்க வேண்டும்.”
“பின்னர் தற்காப்புக்கு செல்லலாம். ஆனாலும், சுப்மனை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை. அவர் புதிய கேப்டன், நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்” சஞ்சுய் மஞ்சுரேக்கர் கூறினார். இதனிடையே, கில்லின் கேப்டன்ஷி குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் கம்பீர், இங்கிலாந்தில் கேப்டன்ஷி செய்வது நடுக்கடலில் தள்ளி விடுவதற்கு சமம்”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் கேட்ச் மிஸ்சால் 160 ரன்கள் கூட அடித்த இங்கிலாந்து.. குறை கூற கூடாது என முன்னாள் ஃபில்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் அட்வைஸ்
“இதில், கில் நீந்தி கரை சேர்ந்து விடுவார் என நம்புகிறேன். பவுலர்களுக்கும் அனுபவம் இல்லை. இது இளம் வீரர்களால் நிறைந்த அணி. பலருக்கும் திறமை இருக்கிறது. எனினும் கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வீரர்கள் நிச்சயம் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொள்வார்கள்” என்று கம்பீர் கூறினார்.