இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. குறிப்பாக முன்வரிசை பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகுஇந்திய அணி இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்காக அமைத்திருந்தாலும், பந்துவீச்சில் அவர்களின் செயல்பாடு மற்றும் களத்தில் கேட்சை கோட்டைவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு கேட்ச்களை தவறவிட்டார், இது இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற பல வாய்ப்புகளை வழங்கியது.
ஜெய்ஸ்வால், பென் டக்கெட்டை இரண்டு முறை தவறவிட்டார். முதலில் 11 ரன்களிலும், பின்னர் 97 ரன்களிலும் கேட்சை கோட்டை விட்டார். இதனால் டக்கட் 62 மற்றும் 149 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து மண்ணில் கடினம்:
மேலும், ஆலி போப் 60 ரன்களில் தவறவிடப்பட்டு, 106 ரன்கள் எடுத்தார் மற்றும் ஹாரி புரூக் (83 ரன்களில் தவறவிடப்பட்டு, 99 ரன்கள் எடுத்தார்.
இந்த வாய்ப்புகள் மூலம் இங்கிலாந்து அணி 160 ரன்களுக்கு மேல் கூடுதலாக எடுக்க உதவியது. இறுதியாக அவர்கள் போட்டியை வென்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ,”இங்கிலாந்துக்கு முதல் முறையாக பயணம் செய்து, சிறந்த ஸ்லிப் பிள்டராக மாறுவது எளிதான காரியமல்ல.”
“நீங்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும், போட்டியில் அது மிகவும் சவாலானது. நிலைமைகள் மிகவும் குளிராக இருக்கின்றன. விரல்கள் உணர்விழந்து போகின்றன. மேலும், டியூக்ஸ் பந்து உங்களை நோக்கி வரும்போது அதைப் பிடிப்பது எளிதல்ல.”லீட்ஸில் பெவிலியன் பக்கத்திலிருந்து கிர்க்ஸ்டால் லேன் முனை வரை மைதானம் சரிவாக இருக்கும். மேலும், காற்று மிகவும் வீசுகிறது.”
ஜெய்ஸ்வால் நல்ல ஃபில்டர்:
“இது தான் கேட்ச் கோட்டை விடப்பட்டதற்கு காரணம். இங்கிலாந்து அணியும் கேட்ச்களை தவறவிட்டது. இது எப்போதும் திறமை பற்றியது மட்டுமல்ல. பெரும்பாலும் நிலைமைகளைப் பற்றியது,” என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.போட்டியில் இந்திய அணி மொத்தம் 10 கேட்ச்களை தவறவிட்டது. இது 2011க்கு பிறகு ஒரு டெஸ்ட் அதிக கேட்சை கோட்டைவிட்டது தற்போது தான்.
இதையும் படிங்க: சாய் சுதர்சனா கருண் நாயரா?.. ரேசில் முந்துவது யார்.. கம்பீர் அகர்கர் அவசரமே காரணம்.. ரசிகர்கள் விமர்சனம்
இந்த தவறவிடப்பட்ட கேட்ச் வாய்ப்புகள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பயன்படுத்திக்கொள்ள உதவியது, மேலும் அவர்கள் 14 ஓவர்கள் மீதமிருக்கையில் இலக்கை எட்டினர். இது தொடர்பாக பேசிய ஸ்ரீதர், “ஜெய்ஸ்வால் உண்மையில் ஒரு சிறந்த பீல்டர். பங்களாதேஷுக்கு எதிராக கான்பூரில் அவர் பிடித்த கேட்ச்கள் அற்புதமானவை. ஏசி அறையில் அமர்ந்து விமர்சிப்பது எளிது, ஆனால் இவை சவாலான கேட்ச்கள் ஆகும்.. பலருக்கு இது இந்த சூழலில் முதல் அனுபவம்,” என்று ஸ்ரீதர் கூறினார்.






