ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் சில இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு தங்களது திறமையை நிரூபித்தனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணியின் தேர்வு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவாக இருந்தது என்றால் நிதிஷ்குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் வெளிநாட்டு மண்ணில் தங்களது திறமையை அபாரமாக நிரூபித்தனர். அதிலும் நித்திஷ் குமார் ரெட்டி தனது அறிமுக தொடரில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அது மட்டுமல்லாமல் ஜெயஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியதைப் போல இந்தத் தொடரிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டார். இருப்பினும் இந்திய உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் இருந்த காரணத்தால் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் அது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நான் கூறியது என்னவென்றால் இந்த போட்டியில் சர்பராஸ்கான் தூக்கி எறியப்பட்டு கேஎல் ராகுல் உள்ளே கொண்டு வரப்படுவது நேர்மையாக இருக்காது என்று கூறினேன். விஷயங்களை கூர்ந்து கவனிப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனென்றால் கிரிக்கெட் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ராகுலுக்காக சர்ப்ராஸ்காரனை நீக்குவதற்கு முன்பு அணி நிர்வாகம் சற்று யோசித்து இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:இப்ப தினேஷ் கார்த்திக் வந்துட்டாரு.. அது மாதிரி பிசிசிஐ இத செய்யும்னு நம்புறேன் – டிவில்லியர்ஸ் பேட்டி
அவர் இதற்கு முன்பு பெற்ற ரன்களுக்காக அவருக்கு சிறிது வெகுமதி அளித்திருக்க வேண்டும். சர்பராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டின் மூலம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து மூன்று அரை சதம் மற்றும் ஒரு 150 ரன்கள் குவித்தார். ஆனால் அதற்குப் பிறகு அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் அதற்கு அடுத்த தொடரில் முழுவதுமாக தூக்கி எறியப்பட்டது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.