இப்ப தினேஷ் கார்த்திக் வந்துட்டாரு.. அது மாதிரி பிசிசிஐ இத செய்யும்னு நம்புறேன் – டிவில்லியர்ஸ் பேட்டி

0
632

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்ற தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் மூன்றாவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட் உலகில் முதல் முதலாக பிரான்சிஸ் வடிவ ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அபார வளர்ச்சி மற்ற கிரிக்கெட் நாடுகளையும் இதுபோல பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் தொடர் நடத்த உந்துகோலாக அமைந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதன் முதல் போட்டி வருகிற ஒன்பதாம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த சீசனில் முதன்முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் விளையாடுவதற்கு இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் பல வீரர்கள் ஓய்வு பெற்று வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடி வரும் நிலையில் இந்தத் தொடரின் பிராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு வரும் டிவில்லியர்ஸ் எதிர்காலத்தில் இதுபோன்ற இந்திய வீரர்களை விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ அனுமதி அளிக்க வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்த தொடரில் அதிக அளவில் இந்திய வீரர்கள் பங்குபெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் வருவார் என்று எங்களுக்கு தெரியும். இது மிகவும் அற்புதம் மேலும் இது தொடருக்கு சிறப்பானது. எதிர்காலத்தில் இதுபோன்று இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்க பிசிசிஐ ஒத்துழைப்பு தரும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே இந்த தொடரின் கேளிக்கையில் விளையாட தயாராக இருங்கள். வெளிநாட்டு வீரர்களை பெறுவதில் எங்களால் தொடர்ந்து வளர முடியும்.

இதையும் படிங்க:இந்திய அணியின் தொடர் தோல்வி.. எதுக்கு கவலைப்படணும்.. கொஞ்சம் திரும்பி நாம யாருன்னு பாருங்க – முன்னாள் வீரர் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தான் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை பின்பற்றி ஒவ்வொரு வெளிநாட்டு அணியும் பலம் அடைவது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உலகின் சிறந்த வீரர்களையும் இந்தியாவில் சிறந்த வீரர்களையும் பெறும்போது கிரிக்கெட் மேலும் தரமானதாக மாறுகிறது. எனவே சுமித் தலைமையிலான அணி இதுபோன்று வெளிநாட்டு வீரர்களை பெறுவதில் உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என கூறுகிறார்.

- Advertisement -