மாற்று வீரரா யார் வேணா வரலாம்.. ஆனா பும்ராவை ரோஹித் இந்த இடத்துல மிஸ் பண்ணுவார்- சஞ்சய் மஞ்சுரேக்கர்

0
38

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி இறுதியாக சில தினங்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடப் போகும் அணி அறிவித்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணியில் பும்ரா இல்லாதது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா இல்லாத இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக போட்டியை முடிக்காமல் பாதியில் இருந்தே வெளியேறினார். இதுவே அப்போது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவருக்கு முழு ஓய்வு தேவை என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பும்ராவின் காயம் சாம்பியன் டிராபி தொடருக்குள் சரியாகிவிடும் என நினைத்து இந்திய நிர்வாகம் அவரை தேர்வு செய்தது. இருப்பினும் அவரது காயம் குறித்து இந்திய அணி பெரிய ரிஸ்க் எடுக்க விரும்பாததால் இறுதியில் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி மாற்று ஏற்பாடுகள் என்ன செய்தாலும் முக்கிய தருணங்களில் பும்ரா இல்லாதது அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மற்ற பவுலர்கள் செய்வது கடினம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா இல்லாமல் போனது ஒரு நிகழ்வு கிடையாது. பும்ரா இல்லாததை இந்திய அணி திடீரென்று உணர்ந்து போல இல்லை. எங்கோ பிரச்சனை உருவாக போகிறது என இந்திய அணி முன்பே அறிந்து அதற்கு தகுந்தவாறு மாற்று ஏற்பாடுகளை செய்தது. ஹர்ஷித் ராணாவின் வருகையும் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அர்ஸ்தீப் சிங்கும் ஷமியும் உடல் தகுதி பெறுவது இந்திய அணிக்கு நல்ல அறிகுறிகள்.

இதையும் படிங்க:அந்த பையனை சோதிச்ச மாதிரி.. இனி ஸ்ரேயாஸ்க்கு இதை செய்ய முடியாது.. அவருக்கு இதான் என் பதில் – கம்பீர் விளக்கம்

பும்ரா வரும்போது பெரிய போட்டிகளில் நெருக்கடியான தருணங்களில் கவனிக்கப்படும். நெருக்கடியான தருணங்களில் இந்திய அணி மீண்டும் களம் இறங்குவதை அவர் உறுதி செய்கிறார். அந்தத் திறமை வெகுசில பந்துவீச்சாளர்களுக்கு உண்டு. அதை இந்திய அணி நிச்சயமாக தவற விடும். இந்தியா திடீரென்று பார்க்கும்போது பலவீனமான அணியாக தோன்றுகிறது. ஆனால் இக்கட்டான தருணங்களில் பும்ரா நன்றாக செயல்பட்டு இந்திய அணியை மீண்டும் பெற்றுப்பாதைக்கு திருப்புவது போல மற்ற பந்துவீச்சாளர்கள் செய்வது மிகவும் கடினம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -