நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாய்ப்பு இருந்தும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இருக்கும் பேட்டிங் பிரச்சனைகள் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய அணி தோல்வி
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 387 ரன்கள் குவிக்க, அதற்கு பிறகு களம் இறங்கிய இந்திய அணியும் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதற்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சால் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 192 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.
இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் கருண் நாயர் மூன்று போட்டிகளாக பேட்டிங்கில் எந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனை குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
எவ்வளவு காலம் ஆதரிக்கும்
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் ஆர்ச்சர் பந்துவீச்சில் மோசமான ஷாட் விளையாடினார். ஆர்ச்சரின் பந்தை அவர் முன்கூட்டியே எதிர்கொள்ள திட்டமிட்டு இருப்பதை நீங்கள் காணலாம். அவர் வீசிய லைனில் சென்று பாயிண்ட் திசையில் மேல்நோக்கி அடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கருண் நாயருக்கு பேட்டிங்கில் சில சிக்கல்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்தியா அவரை எவ்வளவு காலம் ஆதரிக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க:இந்திய அணி தோற்றாலும், பெருமையாக இருக்கு.. 2 இடங்களில் தவறு செய்துவிட்டோம்.. இந்திய அணி கேப்டன் கில்
மேலும் இந்திய அணியின் கேப்டன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய அளவில் விளையாடவில்லை. அவர் சிறந்த 4 பந்துகளை தவறவிட்டார். இந்திய வீரர்கள் இதையெல்லாம் நன்றாக மனதில் கொள்வார்கள். ஏனென்றால் இங்கிலாந்தை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையில் தான் அவர்கள் இங்கு வந்துள்ளார்கள். எனவே இவர்கள் தொடர்ந்து முன்னேற முயற்சிப்பார்கள்” என்று அவர் பேசி இருக்கிறார்.






