ஸ்டோக்ஸ் கெட்டுப் போன குழந்தை மாதிரி நடந்துக்கிட்டார்.. இதை அப்படி செய்திருக்கணும் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
174
Stokes

நேற்று நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடித்துக்கொள்ள இந்திய அணி சம்மதிக்காத போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடந்து கொண்ட விதம் சரியானது கிடையாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள ஏற்பட்ட சர்ச்சைகள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இரு தரப்பில் இருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

- Advertisement -

இங்கிலாந்தின் விமர்சனம்

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் இந்திய அணி தனிப்பட்ட சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டியை கைகுலுக்கி முன்கூட்டியே டிராவில் முடித்து கொள்ளாதது டெஸ்ட் கிரிக்கெட் அவமதித்ததாக அமைந்துவிட்டது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இருவரும் இங்கிலாந்து தரப்புக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். தற்போது இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரிய விவாதமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கெட்டுப்போன பையன் போல நடந்து கொண்டார்

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” இந்திய வீரர்கள் போட்டியை திராவிட முடித்துக் கொண்டு வெளியேறாதது பென் ஸ்டோக்சை வருத்தம் அடைய வைத்திருக்கலாம். அவருடைய முக்கிய பந்துவீச்சாளர்கள் நாள் முழுவதும் பந்துவீசி சோர்வடைந்து இருந்தார்கள். எனவே மீதமுள்ள ஓவர்களை கவனமாக நிர்வகிக்க வேண்டி இருந்தது. எனவே அவர் போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்ள விரும்பினார்”

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் நியாயத்தை மரியாதைய இந்திய அணி கெடுத்துடிச்சு.. இப்படி செய்யலாமா? – ஜோனதன் டிராட் கேள்வி

“அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் டிராவுக்கு சம்மதிக்காத போது பென் ஸ்டோக்ஸ் எரிச்சல் அடைந்தது போல காணப்பட்டார். அப்போது ஒரு கெட்டுப்போன குழந்தையை போல அவர் நடந்து கொண்டார். இந்தியா தொடர்ந்து விளையாட விரும்பியதில் அவர் ஆச்சரியத்தை காட்டியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எல்லாமே உங்கள் விருப்பப்படியே நடந்து விடாது. இந்த சூழ்நிலையை அவர் சரியான முறையில் கையாண்டு இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -