இந்திய அணி தனிப்பட்ட சாதனைகளுக்கு முன்னுரிமை கொடுத்த டெஸ்ட் கிரிக்கெட்டின் தனித்தன்மையை அவமதித்து விட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜோனதன் கூறியிருக்கிறார்.
நேற்று டிராவில் முடிந்த இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முன்கூட்டியே கடைசி ஒரு மணி நேரத்தில் போட்டியை முடித்துக் கொள்வதற்கு கேட்டுக்கொண்டார். அப்பொழுது களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்பொழுது இது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில் கடைசி செசனின் கடைசி ஒரு மணி நேரத்தில் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடித்துக் கொள்ள பந்துவீச்சு கேப்டன் கேட்கலாம். அதற்கு எதிரணி கேப்டன் சம்மதித்தால், போட்டி நடுவர் அத்துடன் போட்டியை டிராவில் முடித்து வைப்பார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது.
அதேசமயத்தில் பேட்டிங் செய்யும் அணியினர் முன்கூட்டியே டிராவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து விளையாடலாம். இப்படி தொடர்ந்து விளையாடுவது எந்த விதத்திலும் தவறானது கிடையாது. இருந்த போதிலும் இந்திய அணி முன்கூட்டியே டிராவுக்கு சம்மதிக்காதது குறித்த விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இது சரி கிடையாது
இதுகுறித்து ஜோனதன் டிராட் கூறும் பொழுது ” ஸ்டோக்ஸ் மனதில் தனிப்பட்ட முறையில் ஆட்டம் முடிந்து விட்டது. இங்கிலாந்து அணியின் தனிப்பட்ட மைல்கற்கள் குறித்த எதுவும் அவர்களது மனதில் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள் என்று கருதுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு ஒருவேளை அவர்கள் இந்த நிலையில் இருந்து, யாராவது முதல் சதத்திற்கு அருகில் இருந்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது நடந்திருக்கலாம்”
இதையும் படிங்க : நீங்க சதத்தை விட்டுக் குடுப்பீங்களா?.. ரொம்ப நல்லவங்க மாதிரி பேச வேணாம் – கம்பீர் கடுமையான கோபம்
“மேலும் இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் அவர்கள் கைக்குலுக்கி போட்டியை டிராவில் முடித்துக் கொண்டு இருப்பார்கள் என்று உணர முடிகிறது. இதுவே கில் போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள கேட்டிருந்தால் நிச்சயம் இங்கிலாந்து முடித்துக் கொண்டிருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று நோக்கமும் அழகும் மரியாதையும் இருக்கிறது. அதை எல்லோரும் காப்பாற்ற வேண்டும். ஆனால் தனிப்பட்ட சாதனைகளுக்காக கை கொடுக்காமல் விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணி அவமதித்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.






