கம்பீருக்கு உடனடியா பிசிசிஐ எச்சரிக்கை பண்ணனும்.. தடுக்கலனா இந்திய கிரிக்கெட் அவ்வளவுதான் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
17
Gambhir

இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இருக்க வேண்டும் எனவும், பயிற்சியாளர் கம்பீரின் மோசமான திட்டங்கள் தொடரை சமன் செய்ய வைத்து விட்டது எனவே பிசிசிஐ விசாரித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத இளம் இந்திய டெஸ்ட் அணி கில் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு என சமன் செய்தது. இதை அனைவரும் சிறப்பான செயல்பாடு என்று பாராட்டி வரும் நிலையில் இந்தியா தொடரை வென்று எடுக்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் திட்டங்கள் பயம் அளிக்கிறது

இந்த நிலையில் பயிற்சியாளர் கம்பீர் தவறான திட்டங்களை கொண்டு வந்து விட்டதாகவும், இதன் காரணமாக வெல்ல வேண்டிய தொடரை சமன் செய்ய வேண்டியதாக மாறிவிட்டதாகவும், மேலும் சிறந்த அணிகளுக்கு எதிராக இந்த திட்டங்கள் பலன் அளிக்காது இந்திய அணி மோசமாக தோற்கும் எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” இந்திய பேட்டிங் யூனிட் சிறந்த எதிரணிகளுக்கு எதிராக சிறப்பானதாகவே இருக்கிறது. மேலும் இந்த பேட்டிங் யூனிட் போதுமானது. ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சு மற்றும் கம்பீரின் தந்திரோபாயங்கள், பந்துவீச்சு மாற்றங்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். எல்லாம் சிறப்பாக கையாளப்பட்டு இருந்தால் இந்தியா மூன்றுக்கு ஒன்று என தொடரை வென்று இருக்கும்”

- Advertisement -

விசித்திரமான அணுகுமுறை

“குல்தீப் போன்ற தரமான பந்துவீச்சாளர் அணியில் இல்லாதது ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக இருந்து வந்தது. நீங்கள் பலவீனமான பந்துவீச்சு தாக்குதல் மற்றும் விசித்திரமான பேட்டிங் அணுகுமுறையை வைத்து ஒரு எதிரணியுடன் விளையாடும் பொழுது, இது போன்ற தவறுகளுக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்”

இதையும் படிங்க : டி20க்கு கில் கட்டாயம் தேவையா?.. ஆனா இன்னொரு பையன் ஈசியா வருவார்.. தடுக்க முடியாது – அஸ்வின் பேச்சு

“குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளுக்கு எதிராக நீங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஏற்கனவே பிஜிடி தொடரில் தவறான திட்டங்களின் காரணமாக பெரிய தோல்வியை சந்தித்தோம். ஆனால் இது குறித்து பிசிசிஐ கம்பீரை விசாரிக்கவில்லை. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து விசாரித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் சிறந்த அணிக்கு எதிராக படுதோல்வியை சந்திப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -