இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதலாவது டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய இளம் வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
ஜிம்பாப்வே தொடரில் அசத்திய அபிஷேக் ஷர்மா
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இளம் நட்சத்திரமாக ஜொலித்த அபிஷேக் சர்மா அந்தத் தொடரில் மொத்தமாக 16 இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் உட்பட 484 ரன்கள் குவித்து தனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். இவரது திறமையை கண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் சர்மா இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
ஆனால் அதற்கு அடுத்த தொடர்களில் இவரது பேட்டிங் சொதப்பலாக அமைய இவருக்கு அடுத்ததாக வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் விளாசி தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் அபிஷேக் ஷர்மா பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் ஒரு நல்ல சுழற் பந்துவீச்சாளராகவும் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்திய அணி நம்பி வாய்ப்பு தர வேண்டும்
இதுகுறித்து அவ்வாறு விரிவாக கூறும்போது ” அபிஷேக் சர்மாவை பொறுத்தவரை அவரது பேட்டிங் பார்க்கும்போது அவர் ஒரு தீவிரமான திறமைசாலி. மேலும் அவர் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளர் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் அவர் ஒரு நல்ல இடது கை சுழற்பந்து வீச்சாளரும் கூட. மேலும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற சூழ்நிலைகளில் விளையாடும்போது எப்போதுமே கூடுதல் மெதுவான பந்துவீச்சாளரின் உதவி தேவை. மேலும் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது அபிஷேக்சர்மா ஒரு சிறந்த வீரராக மாற முடியும். மேலும் அவர் அணியில் பேட்டிங்க்காகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க:பிசிசிஐ போட்ட ரூல்ஸ் ஓகே.. ஆனா இந்த ஒரு விதியை என்னால் ஏத்துக்க முடியாது – இங்கி ஜாஸ் பட்லர் கருத்து
அவரிடம் நல்ல திறமை இருக்கிறது என்று நான் உணர்கிறேன். தென்னாப்பிரிக்காவில் ஒரு நல்ல தாக்குதல் பந்து வீச்சுக்கு எதிராக அவர் 100 மற்றும் 50 ரன்கள் எடுத்தார் என்று நினைக்கிறேன். எனவே அவருக்கு அணி நிர்வாகம் நம்பி வாய்ப்பு கொடுத்தால் அவர் உச்ச நட்சத்திரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பிசிசிஐ தொடர்ந்து அவரோடு இருக்க வேண்டும். ஏனென்றால் ஜெய்ஸ்வால் போன்ற ஒருவர் இருக்கும் போது அவர் இடத்துக்கான ஆபத்துகள் அதிகமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.