பிசிசிஐ போட்ட ரூல்ஸ் ஓகே.. ஆனா இந்த ஒரு விதியை என்னால் ஏத்துக்க முடியாது – இங்கி ஜாஸ் பட்லர் கருத்து

0
696

இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய தொடர்ச்சியான தோல்விகளால் பிசிசிஐ வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக அடுத்தது விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ஒரு விதி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்த பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய மோசமான செயல்பாடுகளால் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி வரலாற்றுத் தோல்விகளை சந்தித்தது. இப்படியே சென்றால் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்று உணர்ந்த இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

அதாவது வீரர்கள் அனைவரும் அணிக்கு ஒதுக்கப்பட்ட பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் எனவும், அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை எனவும், போட்டிகள் நேரத்தில் தனிப்பட்ட விளம்பரங்களில் நடிக்க கூடாது என சில கட்டளைகளை விதித்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் அதன் கேப்டன் ஜாஸ் பட்லர் வீரர்கள் குடும்பத்தினரோடு தங்கக் கூடாது என்ற கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவித்து நவீன கால கிரிக்கெட்டில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஒரு விதியை ஏற்றுக் கொள்ள முடியாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குடும்பம் என்பது மிக முக்கியம் என்று நான் உணர்கிறேன். நாம் இப்போது நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தோடு சேர்ந்து சுற்றுலாக்களுக்கு செல்வது மிக சந்தோஷமான தருணம் என்று நான் நினைக்கிறேன். நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது மக்கள் வீட்டை விட்டு வெளியே நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். கோவிட்டுக்குப் பிறகு இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:இந்திய அணியை சமாளிச்சுருவோம்.. ஆனா மற்ற அணிகளை பார்த்தா இதுல பயமா இருக்கு – பாக் பசித் அலி பேட்டி

நிச்சயமாக இது கிரிக்கெட்டை அதிகம் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதிலும், போட்டிகளில் கவனத்தை செலுத்துவதிலும் சமநிலையை வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்னவென்றால் உங்கள் குடும்பத்தோடு விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும், வீட்டை விட்டு வெளியே இருப்பதன் சுமையை குறைக்க முயற்சிப்பது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்” என பட்லர் கூறியிருக்கிறார்.

- Advertisement -