இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளர் கம்பீர் இடையே உறவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட விஷயம் எந்த மாதிரி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அவருக்கும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே புரிதலும் உறவும் சிறப்பாக அமைந்திருந்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வரவேண்டும் என கேப்டன் ரோகித் சர்மா விரும்பி கேட்டுக் கொள்ளும்படி சிறப்பான முறையில் இணைந்து வேலை செய்திருந்தார்கள்.
கம்பீர் கொண்டு வரும் அணுகுமுறை
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்களை ஆதரிக்க கூடியவராக, தைரியமான அணுகுமுறையை போட்டியில் வெளிப்படுத்த விரும்பக்கூடியவராகவும் இருந்து வந்திருக்கிறார். அவருடைய இந்த பாணி தான் அவருக்கு கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது.
அதே சமயத்தில் ஏறக்குறைய கம்பீரும் ரோஹித் சர்மா போன்ற அணுகுமுறையை கொண்டவர்தான். ஆனால் ரோகித் சர்மா போல அவர் வெற்றி கிடைக்கும் வரை இலகுவாக இருக்க மாட்டார். அவர் தீவிரமான அணுகுமுறையை வெளிப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். எனவே இவர்கள் இருவருக்குள்ளும் அணிரீதியான வேலைகளில் உறவு எவ்வாறு அமையும்? என்பது கேள்வியாக இருக்கிறது.
கம்பீரை நான்கு வருடமாக பார்க்கிறேன்
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “ராகுல் டிராவிட்டும் ரோஹித் சர்மாவும் ஒன்றாக கிளிக் செய்தது தெளிவாக நமக்கு தெரிந்தது. இதேபோல விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் இருந்த பொழுது பிளேயிங் லெவனை தேர்வு செய்ததில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் எப்படி இணைந்து செயல்படுகிறார்கள் என்பதிலிருந்து அவர்கள் உறவை புரிந்து கொள்ளலாம்”
இதையும் படிங்க: விராட் இந்திய கிரிக்கெட்ல இத நீங்கதான் செஞ்சீங்க.. அந்த பெருமை உங்களுக்குதான் – கம்பீர் பாராட்டு
“கடந்த நான்கு வருடங்களாக எனக்கு கம்பீரத் தெரியும். அவர் விளையாட்டை நன்றாக ரீட் செய்ய கூடியவர் அதேபோல மிகவும் சரியாக இருந்து உணர்ச்சிவசப்படாமல் எதையும் அணுகக் கூடியவர். மற்றவர்கள் நினைப்பது போல உணர்ச்சிவசப்படக் கூடியவர் கிடையாது. பயிற்சியாளர் பொறுப்பு மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவர் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் பொழுது தனது அணுகுமுறையை கொஞ்சம் மென்மையாக மாற்றிக் கொள்வார் என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.