இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்சரேக்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்தார். அதற்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர், அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். அவரது பணிச்சுமை மேலாண்மை கருத்தில் கொண்டு ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் நான்காவது போட்டியிலும் பும்ரா விளையாடி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பந்து வீசி வரும் காரணத்தால் அவரால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாதது போல தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், பும்ராவை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போல நடத்த வேண்டும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா படும் சிரமத்தை தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் கண்டோம். ஹெடிங்லியில் சிறப்பாகத் தொடங்கினார். முதல் இன்னிங்ஸில் அருமையாக பந்து வீசிய அவர், இரண்டாவது இன்னிங்ஸின் போது அவரால் அதே மாதிரியாக அவரால் செயல்பட முடியவில்லை. அவருக்கு வேகம் குறைகிறது. அதன் பின் இடைவெளி வந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருக்கும் சூழ்நிலையை நாம் சமாளிக்க வேண்டி இருந்தது.
இதையும் படிங்க:இங்கிலாந்து ஒரு முறை தான் பேட்டிங் செய்யும்.. ரிக்கி பாண்டிங் கணிப்பு.. ஜோ ரூட் பிரம்மாண்ட சாதனை
அவரை ஒரு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போல கையாள வேண்டும். இதுதான் நிலைமை என்பது துரதிஷ்டவசமானது. ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இது நடந்தால் மக்கள் எப்போதும் இதைப் பற்றி பேசுவார்கள். ஆனால் பும்ரா மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் கூட அவர் சிறந்த பவுலராக இருப்பார்” என்று அவர் பேசி இருக்கிறார்.