வருண் சக்கரவர்த்தி கிட்ட தப்பிக்கிறது கஷ்டம்.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான் – மஞ்ச்ரேக்கர் விளக்கம்

0
168
Manjrekar

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நிலையில் அவர் எப்படியான பந்துவீச்சாளராக இருக்கிறார்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் விட்டு தந்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தியின் சாதனையும் சோகமும்

நேற்றைய போட்டியில் வரும் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதின் மூலமாக, மொத்தம் 16 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே விளையாடி இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்தார். அவர் பந்துவீச்சில் செய்திருக்கும் மாற்றங்கள் மிகவும் தாக்கத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.

இப்படியான சிறப்பு சாதனையை அவர் செய்திருந்த போதிலும், இரண்டு முறை அவர் ஐந்து விக்கெட் கைப்பற்றிய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது சோகமான நிகழ்வாக அமைந்திருக்கிறது. இருந்த போதிலும் அவர் இந்திய டி20 செட்டப்பில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வீரராக மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தியிடம் தப்பிக்க முடியாது

வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தி சிறப்பான பந்துவீச்சு அடிக்கடி நடக்க கூடியதாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது மிகவும் அசாதாரணமானது. அவர் பேட்ஸ்மேன்களுக்கு பந்தை மேல் நோக்கி வீசுவதற்கு பயப்படுவது கிடையாது. நேற்றும் அவர் அதைச் செய்தார். ஜெமி ஸ்மித் அவரை ஒரு சிக்சர் அடித்த பொழுது பந்தை கொஞ்சம் ஷார்ட்டாக தைரியமாக மாற்றினார். அவர் பேட்டர்கள் தன்னை நோக்கி வருவதற்கு சவால் விடுகிறார்”

இதையும் படிங்க: சூரியகுமார் நினைக்கிறது நடக்காது.. அவர் இந்த ஒரு மாற்றத்தை செஞ்சே ஆகணும் – மைக்கேல் வாகன் அறிவுரை

“பொதுவாக தைரியசாலிகளுக்கு அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்கும் என கூறுவார்கள். இந்த வகையில் வருண் சக்கரவர்த்தி ரிஸ்க் எடுப்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் விக்கெட் கைப்பற்றுகிறார். பேட்ஸ்மேன்கள் தப்பிப்பதற்கு கடினமான பந்துவீச்சாளராக அவர் மாறுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -