இந்திய கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக வருவதற்கு திலக் வர்மாவுக்கு நல்ல திறமை இருப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டி பேசி இருக்கிறார்.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 165 ரன்னை துரத்திய பொழுது, ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டு இருந்தாலும், இந்திய இளம் திலக் வர்மா ஒரு முனையில் பொறுமையாக இருந்து சிறப்பான முறையில் விளையாடி இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
திலக் வர்மாவின் புத்திசாலித்தனம்
நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வந்துவிட்ட பொழுது, ஆர்ச்சர் அல்லது ஆதில் ரஷீத் இருவரில் ஒருவரை தாக்கி விளையாட வேண்டிய தேவை திலக் வர்மாவுக்கு இருந்தது. திலக் வர்மா இடதுகை வீரர் என்பதாலும், அதில் ரஷீத் லெக் ஸ்பின்னர் என்பதாலும், திலக் வர்மா அவரையே குறி வைப்பார் என்று பலரும் நினைத்தார்கள்.
இப்படியான நிலையில் திலக் வர்மா அதிவேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சரை குறிவைத்து இரண்டு சிக்சர் அடித்து அழுத்தத்தை குறைத்தார். ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் இரு பக்கமும் பவுண்டரி எல்லைகள் தூரமானவை. எனவே தூரமான பக்கத்தை நோக்கி ஆதில் ரஷீத் அடிக்க வைப்பார் என்பதாலும், அது ஆபத்தில் முடியலாம் என்பதாலும், வேகமாக வீசக்கூடிய ஆர்ச்சரை குறி வைத்து, வேகத்தை பயன்படுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக சிக்ஸர்கள் அடித்தார். தற்பொழுது இவரது பொறுப்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அடுத்த தோனி திலக் வர்மாதான்
இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும்பொழுது “திலக் வர்மாவுக்கு இந்திய அணியை வெற்றி பெறும் வைக்க முடியும் என கடைசி வரையில் நம்பிக்கை இருந்தது. இந்த ரன்னை துரத்தி சென்ற பொழுது எந்த இடத்திலும் பீதி அடையவில்லை. இது 18 வது ஓவரிலும் நடக்கவில்லை, பவுண்டரி இல்லாமல் 19வது ஓவரிலும் நடக்கவில்லை. திலக் வர்மா இறுதிவரை நின்று விளையாடுவதில் மகிழ்ச்சியாக காணப்பட்டார்”
இதையும் படிங்க : இங்கிலாந்து அணியை பார்த்தா ஆர்சிபி ஞாபகம்தான் வருது.. இதுக்காக வெட்கப்படனும் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
“கடந்த காலத்தில் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி செய்ததைப் போலவே, அணியை எடுத்துச் செல்லக் கூடியவராகவும் தன்னம்பிக்கை உள்ளவராகவும் இந்த இளம் வீரரை பார்க்கும் பொழுது தோன்றுகிறது. எனவே ஒரு வீரர் உங்களிடம் இப்படியானவராக இருக்கும்பொழுது தாராளமாக அந்த வீரர் மூன்றாவது இடத்தில் இந்த பாத்திரத்தை ஏற்றுச் செய்யலாம். இது ஒன்றும் அவ்வளவு மோசமான விஷயம் கிடையாது” என்று பாராட்டி இருக்கிறார்.






