இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வருகிற 22ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலியின் மோசமான ஃபார்ம்
இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய நட்சத்திர வீரராக கருதப்படும் விராட் கோலி சமீபகாலமாக பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். டி20 உலக கோப்பையில் தடுமாறினாலும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடுகிற ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவரது மோசமான ஆட்டத்தால் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விராட் கோலிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஆதரவு தெரிவிக்கும் சுரேஷ் ரெய்னா
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அவர்களது கிரிக்கெட் நெறிமுறைகள் ஒவ்வொரு போட்டியிலும் வலுவாக இருந்தது. அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள் மேலும் நல்ல சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். விராட் கோலி சிறப்பாகவே செயல்படுகிறார். அவரை இந்தத் தொடரை வைத்து மதிப்படுவது சரியல்ல.
இதையும் படிங்க:பிசிசிஐ செய்யறது குழந்தைத்தனமானது.. கண்டிப்பா ஐசிசி-ல அந்த தண்டனை இருக்கணும் – முகமது அமிர் பேச்சு
இதற்கு முன்பாக 2014-15ல் இந்தியா ஆஸ்திரேலியா சென்ற போது விராட் கோலி நான்கு சதங்கள் அடித்ததாக ஞாபகம். அந்த நேரத்தில் அனைத்து முன்னணி வீரர்களும் விளையாடினர். அடலெய்டு டெஸ்ட்டில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் அப்போது விளையாடவில்லை ஆனால் வெளியே அமர்ந்து அவரது இறக்கமற்ற அணுகுமுறையை பார்த்தேன். விராட் கோலி தனது உடல் மொழியால் மிகவும் வலுவாக இருந்தார்” என்று சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.