கம்பீர் குழு பீதியில இருக்கு.. கடவுள் இடத்தில இருந்து அந்த வீரரை தவறா கணக்கு போடறாங்க – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
93
Gambhir

தற்போது இந்திய அணி நிர்வாகம் நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்ததால் பீதியில் இருப்பதாகவும் இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு தொடர்ந்து தேவையற்ற ஆதரவு கொடுப்பதாகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இடம் மொத்தமாக இழந்த தோற்றது. இதன் காரணமாக தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் தவறுகளை செய்து வருவதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

அவர் மீது ஈர்ப்பாக இருக்கிறார்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணியில் பேட்டிங் போனில் இல்லாத கே.எல்.ராகுலை தொடர்ந்து கூட்டி செல்வதாகவும், அவர் மீது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு ஈர்ப்பு தொடர்ந்து இருந்து வருவதாகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இப்பொழுது சரியான வீரர்களை தேடி சரியான வேலைகளை செய்ய வேண்டிய நேரம். ஆனால் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து பேட்டிங் ஃபார்மில் இல்லாத கேஎல்.ராகுலை ஆதரிக்கிறது. அவர் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரை எப்படியாவது பிளேயிங் லெவனில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க நினைக்கிறார்கள்”

- Advertisement -

கடவுள் இடத்திலிருந்து முடிவு செய்கிறார்கள்

“ஏனென்றால் இவர்கள் அபிமன்யு ஈஸ்வரனை நம்பவில்லை. கடவுளின் இடத்திலிருந்து நாமாக ஒரு வீரர் நன்றாக விளையாட மாட்டார் என்று முடிவு செய்யக்கூடாது. உங்களை ஆச்சரியப்படுத்திய பலவீரர்கள் கடந்த காலங்களில் இருந்திருக்கிறார்கள். நீங்களே உங்களை நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக மாறி இருப்பீர்கள். எனவே இந்த விஷயத்தில் எளிமையாக இருந்து தேர்வு செய்யுங்கள்”

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட்ல பாரம்பரிய முறையில் இருந்து.. கொள்கைப்படி இந்த பையனை ஆட வைங்க – கில்கிறிஸ்ட் அறிவுரை

“தெளிவாக இந்திய அணி நிர்வாகம் தற்போது பீதியில் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து தவறுகள் அதிகரிக்கிறது. எனவே சரியானவற்றை நாம் தேடி கண்டடைய வேண்டும். தற்போது மிகவும் அதிர்ஷ்டமானவர் கேஎல் ராகுல்தான். இந்திய கிரிக்கெட்டில் அவரைப் போன்ற வாய்ப்புகளைப் பெற்றவர்கள் தற்சமயத்தில் மிகவும் குறைவு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -