டி20 உலககோப்பை.. மஞ்ச்ரேக்கரின் மாஸ் இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய வீரருக்கு இடமில்லை

0
99
ICT

நாளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன்னுடைய இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளியிட்டிருக்கும் பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். விராட் கோலி கீழ் வரிசையில் விளையாட கூடாது என்று கூறிய அவர், மூத்தவர்கள் விளையாட வேண்டிய காரணம் இருப்பதால் துரதிஷ்டவசமாக ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து அவரது அணியில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சிவம் துபே ஆகியோர் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் பொருத்தமாக இருப்பார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார். மேலும் இவருடைய அணியில் ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருக்கிறார்கள்.

மேலும் பிளேயிங் லெவனில் பிரதான சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை இவர் வைத்திருக்கிறார். ஆறாவது பந்துவீச்சாளருக்கான வாய்ப்பை சிவம் துபே கொடுத்த போதிலும் கூட, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன்னுடைய அணியில் ஏழாவது இடம் வரையில் மட்டுமே பேட்டிங்கை வைத்துக் கொண்டு, பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்திருக்கிறார். அவர் இது குறித்து கூறும் பொழுது ஹர்திக் பாண்டியாதான் ஆறாவது பந்துவீச்சாளர் என்றுதெரிவித்திருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் வல்லுனர்களும் பேட்டிங் வரிசையை நீளம் செய்கிறேன் என்று ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்களில் செல்லக்கூடாது என்று கூறி வருகிறார்கள். இதற்கு ஏற்ற வகையில் சஞ்சய் மன்சரேக்கர் தன்னுடைய இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : லாரா சொன்னது நடந்தது.. ஸ்காட்லாந்து அணியை புரட்டி எடுத்த ஆப்கானிஸ்தான்.. டி20 உ.கோ பயிற்சி போட்டி

டி20 உலகக் கோப்பைக்கு சஞ்சய் மன்ச்ரேக்கரின் இந்திய அணி பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.