விராட் பும்ரா கிடையாது.. இந்தப் பையன்தான் தலைமுறைக்கு ஒரு முறை பிறக்கும் வீரர் – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
348
Sanjay

இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய இளம் வீரர் ஒருவரை குறிப்பிட்டு தலைமுறைக்கான வீரர் என பாராட்டி பேசியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 35 ரன்கள் எடுத்தார். அடுத்து ரிஷப் பண்ட் 99 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். ஆனால் சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக மாறிக்கொண்டிருக்கும் இந்திய அணி

தற்போது இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல்,என மூன்று மூத்த பேட்ஸ்மேன்களும், ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் என மூன்று இளம் பேட்ஸ்மேன்களும் இருந்து வந்தார்கள். அனுபவமும் இளமையும் சரிவிகிதமாக பேட்டிங் யூனிட்டில் கலந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது சர்பராஸ்கான் விளையாடும் விதத்தின் காரணமாக, மூத்த வீரர் கேஎல்.ராகுல் தன்னுடைய இடத்தை இந்திய டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் இழக்க கூடிய நிலையில் இருக்கிறார். அப்படி அவர் வெளியேறும் பொழுது நான்கு இளம் வீரர்கள் இந்திய பேட்டிங் யூனிட்டில் இருக்க இரண்டு மூத்த வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். இந்த வகையில் இந்திய அணி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இளம் வீரர்கள் கொண்ட அணியாக மாறிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பாராட்டு

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதத்தை தவறவிட்டிருந்த போதும், அவருடைய ஷாட் தேர்வு மற்றும் சர்பராஸ் கானை வழி நடத்தியது என மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் பின் சவுதி பந்துவீச்சில் 107 மீட்டர் தூரத்திற்கு மைதானத்தை விட்டு வெளியே ஒரு சிக்சரை அடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவிடம் வம்பு இழுத்த பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்த இந்திய அணி.. களத்தில் என்ன நடந்தது?

இதுகுறித்து பதிவிட்டுள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “ஒரு தலைமுறையின் வீரர் என்றால் அது தற்பொழுது ரிஷப் பட்ண்தான். டிம் சவுதிக்கு எதிராக அவர் மைதானத்தை விட்டு வெளியே அடித்த அந்த சிக்ஸர் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்த மிகச்சிறந்த ஷாட்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -