அபிஷேக் சர்மாவிடம் வம்பு இழுத்த பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்த இந்திய அணி.. களத்தில் என்ன நடந்தது?

0
666
Abhishek

2024 எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவிடம் வம்பு இழுத்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது ஓமனில் வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மொத்தம் எட்டு ஆசிய அணிகள் பங்கு பெறுகின்ற தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

சிறப்பான முடிவு செய்த கேப்டன் திலக் வர்மா

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தூக்கம் தருவதற்கு அபிஷேக் சர்மா மற்றும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களம் இறங்கினார்கள்.

ஆரம்பத்தில் அபிஷேக் சர்மா தடுமாற பிரப்சிம்ரன் சிங் அதிரடியில் மிரட்டினார். இந்த நிலையில் கடைசி ஓவரில் அபிஷேக் ஷர்மா இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி என நொறுக்கி தள்ளினார். இந்த ஜோடி 6 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

வம்பு இழுத்த பாகிஸ்தான் வீரர்

இதற்கு அடுத்து பவர் பிளே முடிந்து ஏழாவது ஓவரை பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் சுபியான் முகீம் பந்து வீச வந்தார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே அபிஷேக் ஷர்மா அடித்து விளையாட சென்று கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே தேவையான சேதாரத்தை இந்திய ஜோடி செய்து முடித்திருந்தது.

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்ததும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அவரை நோக்கி வாயில் விரல் வைத்து வெளியே செல் என்று கூறினார். இதைக் கேட்ட அபிஷேக் ஷர்மா உடனே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, இரு அணி வீரர்களும் சமாதானம் செய்தார்கள், இறுதியில் நடுவர் தலையிட அபிஷேக் ஷர்மா அமைதியாக சென்று விட்டார்.

இதையும் படிங்க : இந்தியா கொடுத்த டார்கெட் 107 தான்.. ஆனா நாங்க இத செய்யலனா தோத்துடுவோம் – வில்லியம் ஓ’ரூர்க் எச்சரிக்கை

இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமான ஆடுகளத்தில் மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி போட்டியை எடுத்துச் சென்று, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து அசத்தி பதிலடி கொடுத்தது.

- Advertisement -