2025 ஐபிஎல் சிறந்த பேட்டர் இவங்கதான்.. கோலி கிடையாது.. ரன் எடுத்தா மட்டும் போதுமா? – மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட லிஸ்ட்

0
117
Sanjay

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த பேட்டர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கும் சஞ்சய் மஞ்சுரேக்கர் அதில் விராட் கோலியின் பெயரை சேர்க்காதது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மொத்தம் ஒன்பது போட்டிகளில் 65.33 ஆவரேஜில், 144.12 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 392 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இருந்த போதிலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்டர்கள் பட்டியலில் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி பெயரை சேர்க்கவில்லை.

- Advertisement -

முதல் ஐந்து பேட்ஸ்மேன்

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் சாய் சுதர்சன் எட்டு போட்டிகளில் 417 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆர்சிபி விராட் கோலி ஒன்பது போட்டிகளில் 392 ரன்கள் எடுத்திருக்கிறார். லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் 9 போட்டிகளில் 377 ரன்கள் எடுத்தது மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் 9 போட்டிகளில் 373 ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் ஜோஸ் பட்லர் ஒன்பது போட்டிகளில் 356 ரன்கள் எடுத்திருக்கிறார். பொதுவாக ரண்களை வைத்து சிறந்த பேட்டர்களை வரிசைப்படுத்துவது வழக்கம். ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கர் வித்தியாசமான முறையில் வரிசைப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

மஞ்சுரேக்கரின் சிறந்த பேட்டர்கள்

இந்த நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்டர்களை எடுத்த ரண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், நிறைய ரன்கள் எடுத்திருக்க வேண்டும் அதே சமயத்தில் அவர்களுடைய ஸ்ட்ரைக் ரேட் 150 க்கு மேல் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் வரிசைப்படுத்தி இருக்கிறார். இதன் காரணத்தினால் 144 ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் விராட் கோலியை அவர் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சச்சின் மகளுடன் காதலா?.. விராட் ரோகித் எப்படி ஆனவர்கள்? – சுப்மன் கில் வெளிப்படையான பதில்

2025 ஐபிஎல் சிறந்த பேட்டர்கள் :

பூரன்: 377 ரன்கள் – SR 205
பிரியான்ஷ் ஆர்யா: 254 ரன்கள் – SR 202
ஷ்ரேயாஸ்: 263 ரன்கள் – SR 185
சூர்யா: 373 ரன்கள் – SR 167
பட்லர்: 356 ரன்கள் – SR 166
மிட்செல் மார்ஷ்: 344 ரன்கள் – SR 161
டிராவிஸ் ஹெட்: 261 ரன்கள் – SR 159
ஹென்றி கிளாசன்: 288 ரன்கள் – SR 157
கேஎல் ராகுல்: 323 ரன்கள் – SR 154
கில்: 305 ரன்கள் – SR 153

- Advertisement -