இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழந்த முறை குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்து மோசமான சரிவை சந்தித்திருக்கிறது.
இன்று ஸ்டார்க் வீசிய போட்டியில் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதற்குப் பிறகு இந்திய அணி 69 ரன்கள் ஒரு விக்கெட் என நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் அங்கிருந்து மேற்கொண்டு 16 ரன்கள் மட்டுமே எடுத்து 85 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது.
இந்த போட்டியில் வழக்கம்போல் நான்காவது இடத்தில் களம் இறங்கிய விராட் கோலி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவர் வெளியில் செல்லும் ஒரு பந்தை ஆடலாமா வேண்டாமா? என்று யோசித்து இறுதியில் பேட்டை வெளியில் எடுக்கும் பொழுது பந்து அதில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இது குறித்து பேசி இருக்கும் சஞ்சய் மன்சரேக்கர் கூறும் பொழுது “தற்பொழுது விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 48 என சரிந்து இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக துரதிஷ்டவசமாக வெளியில் செல்லும் பந்தை அவர் விளையாடுவது தான் இருக்கிறது. அவர் இது சமாளிப்பதற்கு பிடிவாதமாக வேறு எதையுமே முயற்சி செய்ய மாட்டேன் என்பது சரியானது இல்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் 15 விக்கெட்.. தனியாளாக புரூப் அதிரடி சதம்.. இங்கிலாந்து அணி நியூசிக்கு எதிராக முன்னிலை
இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழந்த முறை மற்றும் கில் ஆட்டம் இழந்த முறை கிரிக்கெட் விமர்சகர்களிடையே பெரிய கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. இருவரும் மிக சாதாரணமான முறையில் விக்கெட்டை கொடுத்து இந்திய ரசிகர்களை பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.