நடப்பு ஐபிஎல் தொடரில் தோனியை தவறான முறையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் கையாண்டு உள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு மகேந்திர சிங் தோனி விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் எப்போது திரும்பி வருவார் என்று சொல்லப்படவில்லை.
உரிமையாளர்கள் மேல் வைப்பேன்
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் போது “ருதுராஜ் சரியாக விளையாட தற்கான குற்றச்சாட்டை நான் அணி உரிமையாளர்கள் மேல்தான் வைப்பேன். கொஞ்சம் முன்னால் போய் பார்த்தால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக கேப்டனாக இல்லாத போது அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்”
“மேலும் தோனி கேப்டனாக தொடர்வாரா என்கின்ற விஷயத்தை சிஎஸ்கே மிகவும் மோசமாக கையாண்டது. இங்குதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தின் முகஸ்துதி இருக்கிறது. தோனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பது மட்டுமில்லை, அதைச் சுற்றி ஒரு முகஸ்துதியும் இருக்கிறது”
இனி தோனி ஏன் வர வேண்டும்?
” ஒருமுறை தோனி கிரீசுக்குள் பேட்டை லேட்டாக கொண்டு வந்து வைத்தார். அப்போது அவர் ஆட்டம் இழந்துவிட்டார் நடுவர் தவறான முடிவை கொடுத்து விட்டார் என்று நான் சொன்னேன். அதற்கு என்னை மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்தார்கள். சிஎஸ்கே பரந்துபட்ட ஒரு கண்ணோட்டத்தை இழந்துவிட்டது”
இதையும் படிங்க : பஞ்சாப் பவுலிங் யூனிட் ஒரு மர்மமான திட்டம் வச்சிருக்காங்க.. அவங்க உலகத்துக்கு சொல்ல வர செய்தி இதுதான் – அஸ்வின் வியப்பு
“தோ னி இனிமேல் விளையாட வந்து என்ன செய்யப் போகிறார். அவர் உள்ளே வந்து மூன்று நான்கு பந்துகள் விளையாடுவார். உடனே இங்கு இருப்பவர்கள் அதை என்ன மாதிரியான ஒரு இன்னிங்ஸ் என்று புகழ்வார்கள். அவர் இனி வந்து எதுவும் செய்யத் தேவையில்லை. அப்படி ஒரு தற்காலிக தீர்வு அவசியம் இல்லை”






