தற்போது பஞ்சாப் பவுலிங் யூனிட் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு திட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு அசத்தி வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.
நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 254 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து விளையாடி லக்னோ அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பஞ்சாப் திட்டம்
பஞ்சாப் அணி பந்துவீச்சில் தொடர்ந்து எதிரணிக்கு ரன்கள் கொடுப்பது போல தெரிகிறது. இதை சரியாக கவனித்தால் அவர்களால் திருப்பி அடிக்க முடிகின்ற அளவுக்கு மட்டுமே தொடர்ந்து ரன்கள் கொடுத்து வருகிறார்கள்.
அதாவது பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் எதிரணிக்கு 200 ரன்கள் தருவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. அதற்கேற்றபடி அவர்கள் உடனுக்குடன் தங்கள் திட்டங்களை மாற்றிக்கொண்டு பவர் பிளேவிலேயே யார்க்கர் வீச ஆரம்பித்து விடுகிறார்கள். எதிரணியை ஆடுகளத்திற்கு சமமான ஸ்கோரை அடிக்க விட்டு திருப்பி அடிக்கிறார்கள்.
பஞ்சாப் மர்ம திட்டம்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது ” தற்போது பஞ்சாப் உலகத்திற்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறது. அதாவது அவர்களுடைய பவுலிங் யூனிட் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறார்கள். அது என்னவென்றால் அவர்களுடைய தற்காப்பான பந்துவீச்சுதான்”
இதையும் படிங்க: அப்பவே பிரியன்ஸ் ஆர்யாவை வாங்க சொல்லி சொன்னேன்.. ஆனா இத சொல்லி மறுத்துட்டாங்க – அஸ்வின் பேச்சு
“நேற்று கூட வைசாக் விஜயகுமாரை வைத்து தற்காப்பாக பவர் பிளேயரிலேயே வைடு யார்கர் வீச வைத்து அசத்தினார்கள். கொஞ்சம் ஆழமாக கவனித்தால் அந்த அணியில் எல்லா பவுலர்களும் தற்காப்பாக வீசுவதை ஒரு திட்டமாகவே வைத்திருக்கிறார்கள். முடிந்தவரை குறைவாக பவுண்டரிகள் தர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






