விராட் கோலியை அவமானப்படுத்திய மஞ்ச்ரேக்கர்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு வைரலாகும் ட்வீட்!

0
68

விராட் கோலியை மட்டம் தட்டி பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. மும்பையைச் சேர்ந்த சஞ்சய் மஞ்சுரேக்கர் எப்போதுமே அவர்களது சொந்த ஊர் வீரர்களை தான் பெருமையாக பேசும் பழக்கத்தை கொண்டவர்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி பட்டையை கிளப்பிய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தன்னுடைய கால் பதத்தை பதிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.

- Advertisement -

இதில் இடம்பெற்றிருந்த விராட் கோலி கடுமையாக தடுமாறினார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் அவர் ஆட்டம் இழந்ததால் மூன்றாவது டெஸ்டில் விராட் கோலி நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த சஞ்சய் மஞ்சரேக்கர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதவி விட்டிருந்தார்.

அதில் தாம் விவிஎஸ் லக்ஷ்மனை அணியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை அடுத்த டெஸ்ட்டுக்கு பயன்படுத்துவேன். இது ஒரு நீண்ட காலத்திற்கு தேவையான ஒரு மாற்றம் ஆகும். இதே போல் விராட் கோலிக்கும் நான் மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுப்பேன்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தகுதியான நபர் கிடையாது என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த வாய்ப்பைத் தருவேன் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

அந்த தொடரில் மூன்றாவது டெஸ்டில் தோனி, விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். அப்போது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் அவர் முதலில் 44 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்களும் அடித்து இருந்தார்.

இதனை அடுத்து நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்தார். இதன் மூலம் அந்த தொடரில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார். அதிலிருந்து விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான வீரராக திகழ்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது 9000 ரன்களை விராட் கோலி தொட இருக்கிறார். இதேபோன்று ஆஸ்திரேலியாவில் 2018 ஆம் ஆண்டு இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கேப்டனாக டெஸ்ட் தொடரையும் வென்றார்.