ஐபிஎல்

மும்பை அணியை 70களின் வெஸ்ட் இண்டீஸ் அணியோடு ஓப்பீடு..சஞ்சய் மஞ்சரேக்கர் பேச்சுக்கு ரசிகர்கள் பதிலடி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இதில் இரண்டு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் அவர்கள் இறுதிப் போட்டியில் வென்றிருக்கிறார்கள்.  மும்பை பொறுத்தவரை எப்போதும் முதல் பாகத்தில், அம்பி போலவும் இரண்டாவது பாதியில் அந்நியன் போலவும் விளையாடி வெற்றி பெறுவார்கள்.

- Advertisement -

இந்த சீசனில் மட்டும் நான்கு முறை வெற்றிகரமாக 200 ரன்களை சேசிங் செய்து இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய பேட்டிங் தரம் குறித்து உங்களுக்கு புரிந்திருக்கும்.
கடந்த இரண்டு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணி, இம்முறை குஜராத் அணியின் தயவால் பிளே ஆப் சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றுள்ளது. மழை வந்து காப்பாற்ற வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்த மும்பை ரசிகர்கள் தற்போது பிளே ஆப்க்கு வந்ததும் தங்களுடைய பழைய புராணங்களை பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர்,  ஒரு படி மேல் போய் மும்பை இந்தியன்ஸ் அணியை 70களில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிட்டு இருக்கிறார். அது 1970களில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் 2000 பிற்பகுதியில் ஆஸ்திரேலிய அணி எவ்வாறு வெற்றி பெறுமோ அதே போன்று ஒரு தொடர் வெற்றிகளை மும்பை இந்தியன்ஸ் அணி பெறுகிறார்கள். மும்பை அணியின் கேப்டன்கள் யாராக இருந்தாலும் சரி, மும்பை அணியில் விளையாடும் வீரர்களுக்கு நாம் மற்ற அணிகளை விட பலமானவர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கிடைத்துவிடும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்த தொடரில் விளங்கியது உயர்தர பேட்டிங் தான். இது போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள பந்துவீச்சாளர்களை நாம் கவனிக்க தவற விட்டோம். சாவ்லா ஓய்வு பெறும் நிலையில இருந்து தற்போது திரும்பி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஜேசன் பெகுரண்டப் பவர் பிளேவில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்கும் போது பும்ரா ஜோப்ரா ஆகியோர் இல்லாமல் அவர்கள் மிகவும் சாதாரணமான அணியாக திகழ்ந்தார்கள். ஆனால் திடீரென்று சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து வெற்றியை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறார்கள் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியுள்ளார்.

மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியுடன் மோதுகிறது. லக்னோவை இதுவரை மூன்று முறை சந்தித்துள்ள மும்பை அணி ஒன்றில் கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by