டி20 உலகக் கோப்பை 2024

டி20 உலககோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு.. முரட்டு பேட்டிங் லைன் அப்.. முக்கிய வீரர் சேர்ப்பு

நடப்பு ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்கும் டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றி நடப்பு டி20 உலக சாம்பியனாக இருந்து வருகிறது. கடந்த முறை இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியமான காரணங்களில் ஒருவராக இருந்த பென் ஸ்டோக்ஸ் இந்த முறை அணியில் இடம் பெறவில்லை.

அதே சமயத்தில் டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில், அபாயகரமான வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் சரியாகி மீண்டும் இணைந்து இருக்கிறார். இது அந்த அணியை இன்னும் பலமானதாக மாற்றுகிறது.

மேலும் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பில் சால்ட், ஆர்சிபி அணிக்காக கடந்த போட்டியில் அதிரடி சதம் அடித்த வில் ஜேக்ஸ் ஆகியோரும் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் வேகப்பந்துவீச்சு ஆல்ரண்டர்களாக சாம் கரன் இடம்பெற்று இருக்கும் நிலையில், கிரீஸ் வோக்ஸ்க்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து சுழல் பந்துவீச்சு கூட்டணியில் மொயின் அலி மற்றும் ஆதில் ரஷீத் இருவருடன், இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய இடது கை சுழல் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லிக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பேட்ஸ்மேன்களாக ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டன் , டக்கெட், ஜானி பேர்ஸ்டோ என இடம்பெற்று இருக்க, இந்த இங்கிலாந்து அணி முரட்டு அணியாக காணப்படுகிறது.

2024 டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், ரீஸ் டாப்லி, ஆதில் ரஷீத், மார்க் வுட் மற்றும் பில் சால்ட்.

Published by