டி20 உலகக் கோப்பை 2024

டி20 உலககோப்பை இந்திய அணி அறிவிப்பு.. பல ஆச்சரிய முடிவுகள்.. ரிங்கு சிங்குக்கு இடமில்லை

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில், வரவிருக்கும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார்.

- Advertisement -

இன்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவால் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா இருக்க, பல சர்ச்சைகளுக்கு மத்தியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்திருக்கிறார்கள். அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்கின்ற அளவுக்கு சந்தேகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விராட் கோலி அணியில் இடம் பெற்று இருக்கிறார். அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவம் துபேவை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரையும் அணியில் சேர்த்து இருக்கிறார்கள்.

அதேசமயத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மிகச் சிறப்பாக பினிஷிங் இடத்தில் செயல்பட்ட ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மாவையும் சேர்க்கவில்லை.

- Advertisement -

இத்துடன் சுழல் பந்துவீச்சு வரிசையில் ஆல்ரவுண்டர்கள் ரவிந்திர ஜடேஜா அக்சர் படேல் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சாகல் மற்றும் குல்தீப் யாதவ் இருக்கிறார்கள். ரவி பிஷ்னாய்க்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, சிராஜ், மற்றும் அர்ஸ்தீப் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் இருந்து எந்த புதுமுக வீரருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. குறிப்பாக கேஎல்.ராகுல் கழட்டிவிடப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு.. முரட்டு பேட்டிங் லைன் அப்.. முக்கிய வீரர் சேர்ப்பு

2024 டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாகல், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.

இந்த அணி உடன் ரிசர்வ் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமத், ஆவேஸ் கான் என நான்கு வீரர்கள் செல்கிறார்கள்.

Published by