குஜராத் அணிக்காக இவர் இந்த ஆண்டு இவ்வளவு சிறப்பாக ஆடுவார் என் எதிர்பார்க்கவே இல்லை – சஞ்சய் மஞ்சரேக்கர் புகழாரம்

0
73
Sanjay Manjarekar about Gujarat Titans

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் கொரோனை தொற்றைத் தாண்டி, இந்தியாவின் மும்பை, நவிமும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு நேற்றோடு முடிந்திருக்கிறது.

இந்த ஐ.பி.எல் தொடர் மெகா ஏலத்தோடும், புதிய இரண்டு அணிகளின் வருகையோடும் ஆரம்பமே அதிரடியாகத்தான் துவங்கியது. ப்ளே-ஆப்ஸ் சுற்றில் ஒருசேர மும்பை, சென்னை அணிகள் முதல் முறையாக நுழைய முடியாது போக, புதிய அணிகளான லக்னோ, குஜராத் அணிகளும், ராஜஸ்தான், பெங்களூர் அணிகளும் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.

- Advertisement -

இறுதியாக லக்னோ, பெங்களூர் அணிகள் ப்ளேஆப்ஸ் சுற்றில் தோற்று வெளியேற, ராஜஸ்தான், குஜராத் அணிகள் இறுதிபோட்டிக்குத் தகுதிபெற்று, நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை வென்று சாம்பியன் ஆனது.

நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது யாருடைய நம்பிக்கையையும் பெற்றிருக்காத குஜராத் அணி தொடர்ச்சியாக வென்று ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதோடு, முதல் அணியாக இறுதிபோட்டியிலும் நுழைந்து, தற்போது கோப்பையை வென்று மென்மேலும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. குஜராத் அணியில் எல்லா வீரர்களின் பங்களிப்பும் மிகச்சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் வந்து 16 ஆட்டங்களில் 68.71 என்ற சராசரியோடு 142.73 என்ற ஸ்ட்ரைக்ரேட்டில் 481 ரன்களை குவித்த டேவிட் மில்லரின் பங்களிப்பு முக்கியமானதாய் கருதப்படுகிறது.

இதுகுறித்துக் கருத்துக் கூறியுள்ள முன்னாள் இந்திய வீரர் சஞ்சு மஞ்ரேக்கர் “டேவிட் மில்லர் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தார். அவருக்கு ஐ.பி.எல் தொடரில் முதல் இரண்டு வருடங்களைத் தவிர மற்ற ஆண்டுகள் சிறப்பாய் அமையவில்லை. இந்த ஆண்டு புதிய உரிமையாளருக்காக விளையாடும் பொழுது, அவர் புதிய எழுச்சியோடு வந்திருக்கிறார். இறுதிபோட்டியிலும், முதல் தகுதிசுற்றுப் போட்டியிலும் வெற்றிக்கு மிக முக்கியமாய் இருந்தார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் குஜராத், ராஜஸ்தான் அணிகளைப் பற்றிப் பேசிய அவர் “ஒரு சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பையைக் கைப்பற்றி இருப்பதால் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சிறந்த அணி என்று சொல்லிவிட முடியாது. 14 வருடம் கழித்து இறுதிபோட்டிக்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இது பொருந்தும். அவர்கள் அடுத்த சீசன் எப்படித் திரும்பி வருகிறார்கள் என்று பார்த்தே கூறமுடியும். சென்னை, மும்பை அணிகள் உச்சத்தில் இருந்த பொழுது 8-9 வீரர்கள் தொடர்ந்து அந்த அணிகளின் வெற்றிக்குப் பங்களித்திருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்!