177 ரன் 13.4 ஓவர்.. கிருஷ்ணமூர்த்தி அதிரடி பேட்டிங்.. ஸ்டீவ் ஸ்மித்தின் வாஷிங்டன் அணி தோல்வி.. எம்எல்சி 2024

0
3259

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின. இதில் இந்திய வம்சாவளி வீரரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத்தின் அதிரடி ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 15.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 174 குவித்த போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. வாஷிங்டன் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் தலா 56 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, ரச்சின் ரவீந்திரா அதற்குப் பிறகு ஆறு பந்துகளில் இரண்டு சிக்சர்களுடன் 16 ரன்கள் குவித்தார். 174 ரன்கள் குவித்த போது மழையால் ஆட்டம் தாமதமானது.

பின்னர் நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு டக் வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகான் அணிக்கு 14 ஓவர்களில் 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் முதல் பந்தை எதிர்கொண்டு வெளியேறிய நிலையில், அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய வம்சாவளி வீரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவரோடு ஜோஷ் இங்கிலீஷ் கூட்டணி அமைக்க, இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 30 பந்துகளில் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

17 பந்துகளில் 45 ரன்கள் குவித்த நிலையில் ஜோஷ் இங்கிலீஷ் வெளியேற, அதற்குப் பிறகு ஹாசன் கான் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பாக விளையாடி 13.4 ஓவர்களில் 177 ரன்கள் குவித்த யூனிகான் அணியை வெற்றி பெற வைத்தனர். 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் என 79 ரன்கள் குவித்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க:என் கேகேஆர் டீம் கேப்டன்.. கம்பீர் டிராவிட்டை விட வித்தியாசமா இதை நிச்சயம் கொண்டு வருவார் – ராபின் உத்தப்பா பேட்டி

இந்திய வம்சாவளி வீரரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத் தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். 21 வயதான இவர் இடது கை சுழற் பந்துவீச்சாளரும், வலது கை பேட்ஸ்மேன் கொண்ட திறமையான ஆல் ரவுண்டர் ஆவார். இவர் அமெரிக்காவில் வசித்தாலும் கர்நாடகா அண்டர் 16 அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -