டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் விளையாடி இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சஞ்சய் பாங்கர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதலாவது போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. அப்போது ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார்கள். வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலாவது போட்டியில் இருந்து விலக, அவருக்கு பதிலாக முகமது சிராஜ் முதலாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
அதேபோல ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் அவரது காயம் குறித்து பெரிய பிரச்சனை ஏதும் இல்லாததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பை போன்ற முக்கிய தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டெல்லி போன்ற ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் போட்டியை விளையாடுவது சரியாக இருக்காது என்ற சஞ்சய் பாங்கர் கருதுகிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி பொறுமையாக இருந்ததால் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் மீண்டும் சேரப் போகிறார் என்பது சிறந்த செய்தி. அவரது திறமைகளில் இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. முதல் போட்டிக்கு அவர் கிடைக்காவிட்டாலும் இந்திய அணி அவரோடு தொடர்ந்து இருந்ததே இதே போன்ற கூட்டணியோடு இந்திய அணி விளையாட விரும்புகிறது என்பதை காட்டுகிறது.
உதாரணமாக சுழற் பந்து ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை என்றால் வாஷிங்டன் சுந்தர் அடுத்த போட்டியில் இடம் பெற முடியும். ஆனால் அவர் டில்லியில் விளையாடுவதை நான் பார்க்கவில்லை. ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக அடுத்த போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இந்த போட்டியில் இடம் பெறாமல் போக முகமது சிராஜுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.






