நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் சிஎஸ்கே அடுத்த ஆண்டு இந்த இரண்டு வீரர்களை விடுவிப்பது குறித்து நிச்சயம் யோசிக்கும் என கூறி இருக்கிறார்.
சிஎஸ்கே தொடர் தோல்வி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திரும்பவும் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் ஏழு தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே நேற்றைய போட்டியின் மூலமாக எட்டாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தில் அப்படியே இருக்கிறது. எனவே அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மாற்றங்களை செய்யவில்லை என்றால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
பந்து வீச்சுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பெரிய தொகையை செலவிட்டதால் தரமான பேட்ஸ்மேன்களை அந்த அணியால் வாங்க முடியாமல் போனது. எனவே அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மதீசா பத்திரனா ஆகிய இருவரையும் விடுவிப்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயமாக யோசிக்கும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.
நிச்சயம் சிஎஸ்கே யோசிக்கும்
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் விரிவாக கூறும்போது “அஸ்வினை தக்க வைத்துக் கொள்வதா அல்லது இல்லையா என்பது குறித்து பெரிய கேள்வியாக இருக்கும். ஏனென்றால் பெரிய தொகை தற்போது பூட்டப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பணப் பையை கொஞ்சம் விடுவிக்க விரும்பினால் கடந்த சீசனில் அஸ்வினுக்கு பயன்படுத்தப்பட்ட தொகையை அடுத்த சீசனில் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே அடுத்த சீசனுக்கு முன்பாக அந்த பெரிய வீரர்களான (அஸ்வின் மற்றும் பத்திரனா) ஆகிய இருவரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா அல்லது அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை தேட விரும்புகிறார்களா? என்று பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:190 ரன் அடிச்சும்.. நாங்க தோக்க இந்த 2 விஷயம்தான் முக்கிய காரணம்.. இத மாத்தவே முடியல – தோனி பேச்சு
கடந்த ஆண்டு அஸ்வின் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதேபோல பத்திரனா 18 கோடி ரூபாய் தக்கவைக்கப்பட்டார். இவர்களைத் தவிர ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் தூபே போன்ற வீரர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். சிஎஸ்கே ஏற்கனவே 10 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் இன்னும் நான்கு போட்டிகள் இருப்பதால் இந்த நான்கு போட்டிகளிலாவது தேவையான மாற்றங்களை செய்து அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.






