இந்திய கிரிக்கெட்

முன்னாள் கோச்சா சொல்றேன்.. இந்த 26 வயசு பையனுக்கு இந்திய டீம்ல இடம் கொடுங்க – சஞ்சய் பாங்கர் வேண்டுகோள்

இந்திய அணி இன்று ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் நிலையில் எதிர்காலத்திற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது யுஏஇ கண்டிஷனுக்கு தகுந்தவாறு இந்திய பிளேயிங் லெவன் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அர்ஸ்தீப் சிங் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. சிவம் துபே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாடுகிறார்.

எதிர்காலத்திற்கு சரியானதா?

2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது பும்ரா காயமடைந்திருந்த நிலையில், அவருடைய இடத்தை நிரப்பக்கூடியவராக இளம் வீரர் அர்ஸ்தீப் சிங் சிறப்பாகவே செயல்பட்டார்.

இதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறினார். இந்திய அணி அந்த உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு மிகவும் முக்கியமான காரணமாகவும் இருந்தார். பும்ராவுக்கு மாற்றாக செயல்படக்கூடிய அளவுக்கு இருப்பதால் அவரை எதிர்காலத்திற்காக தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

இது குறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது “இளம் வீரராக அர்ஸ்தீப் மிகச் சிறப்பான முறையில் விளையாட ஆரம்பித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இன்று ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பதற்கு சரியான வழியாக இது இருக்கும். மேலும் எதிர்காலத்திற்காகவும் இதைச் செய்தாக வேண்டும்”

இதையும் படிங்க : ரோகித்துக்கு மாற்று அபிஷேக் ஷர்மா இல்ல.. மொத்தமான ஜெராக்ஸ் இவர்தான் – முகமது கைஃப் பேட்டி

“சிவம் துபே ஒரு நடுத்தர வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் அவர் பெரிய அளவில் சிக்ஸர் அடிக்கக்கூடியவராக சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்கு செயல்பட்டு இருக்கிறார். இந்த திறமையின் காரணமாக தற்பொழுது அவர் வாய்ப்பு பெற்று வருகிறார். ஆனாலும் அர்ஸ்தீப் சிங் விளையாட வைக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by